ரூ 10 கோடி கொடுக்காட்டி என்னை கொன்று விடுவாராம்.. 3வது மனைவி ரம்யா மீது நடிகர் நரேஷ் பாபு புகார்
ரூ 10 கோடி கேட்டு 3வது மனைவி ரம்யா ரகுபதி கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் நரேஷ் பாபு பரபரப்பு புகார்.
ஹைதராபாத்: தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ்பாபு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் மகன் நரேஷ் பாபு. இவருக்கு நடிகர் மகேஷ் பாபு சகோதரர் ஆவார். இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்து வருகிறார்.
மகேஷ் மட்டும் இல்லை நரேஷ் பாபுவும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்தான். இவருக்கு ஏற்கெனவே மூன்று முறை திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் 3ஆவது மனைவி ரம்யா ரகுபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நரேஷ் பாபு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கன்னட நடிகை
அப்போது அவருக்கும் கன்னட நடிகை பவித்ரா லோகேஷுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே தனிமையான இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்த விவகாரம் ரம்யாவுக்கு தெரியவரவே அவர் நரேஷ் பாபுவுடன் சண்டையிட்டுள்ளார். இந்த நிலையில் ஒரு முறை மைசூரில் ஹோட்டலில் நரேஷும் பவித்ராவும் ஒரே அறையில் இருந்தனர்.

ரம்யா
இதை அறிந்த ரம்யா அந்த இடத்திற்கு வந்து இருவரையும் வெளியே வர வேண்டும் என கோரி தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து போலீஸார் வந்து கதவை தட்டி அவர்களை வெளியே வரவழைத்தனர். அவர்களை பார்த்ததும் ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய ரம்யா ஒரு கட்டத்தில் தனது கணவர் நரேஷை செருப்பால் அடிக்க பாய்ந்தார். போலீஸார் தடுத்தனர்.

சிரித்து நக்கல் செய்த நரேஷ்
எனினும் நரேஷ் சிரித்துக் கொண்டே ரம்யாவை வெறுப்பேற்றியபடியே ஹோட்டலை விட்டு வெளியேறினார். இதையடுத்து இந்த விவகாரம் அமைதியாக இருந்தது. இந்த நிலையில் கடந்த புத்தாண்டு அன்று நரேஷும் பவித்ராவும் ஒரு பதிவை வெளியிட்டிருந்தனர். அதில் இருவரும் கேக் வெட்டி கொண்டாடி, லிப் லாக் வீடியோவையும் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.

விரைவில் திருமணம்
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில் நடிகர் ரமேஷ் பாபு தனது மூன்றாவது மனைவி ரம்யா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நரேஷ் பாபு, ரம்யா ரகுபதி என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு ரம்யாவை திருமணம் செய்து கொண்ட நாள் முதல் அவர் என்னை டார்ச்சர் செய்து வருகிறார்.

ரூ 10 கோடி கேட்டு மிரட்டல்
என்னிடம் ரூ 10 கோடியை கேட்கிறார், தராவிட்டால் கொன்றுவிடுவேன் என்கிறார் என நரேஷ் பாபு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனக்கு ரம்யாவிடம் இருந்து தெலுங்கானா நீதிமன்றம் விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நரேஷ் பாபு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications