இந்த படத்தை ட்ரோல் செஞ்சா.. சிவபெருமான் கோபத்துக்கு ஆளாகிடுவீங்க! நடிகர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 'கண்ணப்பா' திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை யாராவது ட்ரோல் செய்தால் அவர்கள் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாகிவிடுவீர்கள் என்று நடிகர் ரகு பாபு எச்சரித்துள்ளார்.

புராண கதைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் படம் ரசிகர்களின் உணர்வுகளுடன் ஒட்டி பயணிக்கவில்லை என்றால் அப்படங்கள் கடும் ட்ரோலுக்கு உள்ளாகின்றன. இப்படி இருக்கையில் ரகு பாபுவின் எச்சரிக்கை மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

Movie Kannappa Raghu Babu

சிவபெருமானின் பக்தரான கண்ணப்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தை தயாரித்திருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார். இதனை ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. படத்திற்கு விஷ்ணு மஞ்சு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் படம் தயாராகியுள்ளது.

கடந்த ஆண்டு படத்தில் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அடுத்த மாதம் 25ம் தேதி படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. எனவே இந்த திரைப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெலங்கானாவில் அப்படியொரு புரமோஷன் மீட்டிங்கில்தான் நடிகர் ரகு பாபு வார்னிங் கொடுத்திருக்கிறார். இந்த படத்தை யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும் என்று கூறியுள்ளார்.

இந்த படம் ட்ரோல் ஆகிறதோ இல்லையோ, இவர் பேசிய வீடியோ படு பயங்கரமாக ட்ரோலாகி வருகிறது. திரைப்படத்தை கொண்டாடுவதும், அதன் மீது விமர்சனங்களை வைப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அவ்வளவு சிறப்பாக கொண்டாடப்பட்ட பாகுபலி திரைப்படமே கொஞ்ச நாட்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. அப்படி இருக்கையில் ரசிகர்கள் எந்த படத்தை கொண்டாடுவார்கள்? எதை ட்ரோல் செய்வார்கள் என்பதை கணிக்கவே முடியாததாகி இருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.

அந்த வகையில் கண்ணப்பா திரைப்படம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+