Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அல்லு அர்ஜுனை விடுங்க.. ராம் சரணுக்கு காத்திருக்கும் சிக்கல்? உள்ளே இறங்கும் ‘பெரிய தலை’ சிரஞ்சீவி?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் விவகாரம், ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகினருக்கே தலைவலியைக் கொடுத்துள்ளது. இனி எந்தப் படத்துக்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது என ரேவந்த் ரெட்டி அரசு பிடிவாதம் காட்டுவதால், டோலிவுட்டினர் அதிர்ந்து போயுள்ளனர். சிரஞ்சீவியை பேச வைத்து இந்தச் சிக்கலை தீர்க்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்க்க கடந்த 4 ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினரோடு வந்திருந்தார். அதனால், அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, புஷ்பா 2 சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

allu arjun revanth reddy telangana

அல்லு அர்ஜுன் விவகாரம்

நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 13 ஆம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த விவகாரத்தில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார் என்று போலீசார் கூறிய பிறகும், அங்கிருந்து உடனே கிளம்பாமல், ரோடு ஷோ நடத்தினார் எனக் குற்றம்சாட்டினார் ரேவந்த் ரெட்டி. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளிவந்துள்ளன.

இது அல்லு அர்ஜுனுக்கு சிக்கலாக மாறியுள்ளது. நேற்று அல்லு அர்ஜுன் வீட்டின் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தெலுங்கானா போலீசார் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார், ஜாமீனை ரத்து செய்யக் கோரினால் நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், அல்லு அர்ஜுன் விவகாரத்தின் சூடு இப்போது தணிய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

லெஃப்ட் ரைட் வாங்கிய ரேவந்த் ரெட்டி

முன்னதாக, சட்டசபையிலேயே ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகினரையும் லெஃப்ட் ரைட் வாங்கி இருந்தார் ரேவந்த் ரெட்டி. “நீங்கள் தொழில் நடத்தவும், திரைப்படங்களை எடுக்கவும், பணம் சம்பாதிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் அரசிடமிருந்து உங்களுக்கு ஊக்கத்தொகை, மானியங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும். ஆனால், ஒருவரின் கொலைக்கு காரணமான பிறகு, இனிமேல் உங்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவ்ம் கிடையாது.

இத்தனை வருடங்களில் சினிமா துறைக்கு டிக்கெட், விலை மற்றும் சிறப்பு காட்சிகள் என சலுகைகள் வழங்கப்பட்டு நன்றாக இருந்தது. ஆனால் இப்போது திரையுலகம் சாமானியர்களைக் கொல்லத் தொடங்கிவிட்டது. இனிமேல், நான் தெலுங்கானாவின் முதல்வராக இருக்கும் வரை திரைத்துறைக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைக்காது. நான் முதலமைச்சராக இருக்கும் வரை தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்பு காட்சிகள் கிடையாது" என ஆவேசமாகக் கூறினார் ரேவந்த் ரெட்டி.

சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையவே கிடையாது

தெலுங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பாது, புதிய படங்களுக்கான டிக்கெட் விலை உயர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்தார். இது தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகையை தெலுங்கு மக்கள் சங்கராந்தி என கொண்டாடும் நிலையில், சங்கராந்தி ரிலீஸுக்கு பல படங்கள் காத்திருக்கின்றன. இந்தச் சூழலில் ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி கிடையாது என ரேவந்த் ரெட்டி அரசு ஸ்ட்ரிக்ட்டாக கூறி வருவதால் சலசலப்பு எழுந்துள்ளது.

அதிர்ந்து டோலிவுட் திரையுலகினர்

ரேவந்த் ரெட்டியின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த டெல்லியில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா மாவட்டங்கள் தெலுங்கு சினிமா உலகின் முக்கியமான மார்க்கெட் ஏரியாக்கள். தெலுங்கானா அரசின் முடிவால், தெலுங்கு சினிமா பலத்த அடியை சந்திக்கும், திரையிலகினர் பாதிக்கப்படுவார்கள் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

ராம்சரண் படம்

சங்கராந்தி ரிலீஸ் படங்களில், ராம்சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்’ படமும் இருக்கிறது. தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிகள் மற்றும் டிக்கெட் விலை உயர்வை அனுமதிக்கவில்லை என்றால் முதலில் பாதிக்கப்படப் போவது ராம் சரண் தான். தனது மகன் பாதிக்கப்படுவதை சிரஞ்சீவி நிச்சயம் விரும்பமாட்டார்.

சிரஞ்சீவி தலையீடு?

இதன் காரணமாக, தெலுங்கானா அரசுடன், மெகா ஸ்டார் சிரஞ்சீவியை பேச்சுவார்த்தை நடத்த வைக்க சில முக்கிய புள்ளிகள் முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. சிரஞ்சீவி, முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்ததால், மேலிடம் வரை செல்வாக்கு கொண்டவர். அதன் காரணமாக அவரை மத்தியஸ்தம் செய்யுமாறு டோலிவுட் துறையினர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டபோது, அவரது வீட்டுக்குச் சென்றதைத் தவிர, இந்த விஷயத்தில் எதுவும் பேசாமல் சைலண்டாக இருந்து வருகிறார். இத்தனைக்கும், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுனுக்கு நெருக்கமான உறவினர் தான். அல்லு அர்ஜுனின் தந்தையின் சகோதரி கணவர் தான் சிரஞ்சீவி. சிரஞ்சீவி, அல்லு அர்ஜுனுக்கு மாமா. அதனால், அவர் தலையிட்டால் பிரச்சனைக்கு தீர்வு வரும் என்பது தெலுங்கு திரையுலகினரின் நம்பிக்கை. ஆனால், சிரஞ்சீவி என்ன நினைக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

பெரிய கேள்விக்குறி

அல்லு அர்ஜுனின் மாமனார் சந்திரசேகர் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் தீப்தாஸ் முன்ஷியை சந்திக்க முயன்றதாகவும், ஆனால் அவர் சந்திரசேகர் ரெட்டியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்தளவுக்கு அல்லு அர்ஜுன் விவகாரத்தில் தெலுங்கானா அரசு தீவிரம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால், சிரஞ்சீவி தலையிட்டாலும் கூட, திரையுலகினரின் சிக்கல் தீருமா என்பது கேள்விக்குறியே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+