அல்லு அர்ஜுனுக்கு செக் வைக்கும் ரேவந்த் ரெட்டி.. ஜாமீனுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு! போச்சு
ஹைதராபாத்: புஷ்பா 2 ரசிகை மரண வழக்கில் தெலுங்கானா காவல்துறை அதிகாரிகள் அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயது பெண் உயிரிழந்தது மற்றும் அவரது மைனர் மகன் பலத்த காயம் அடைந்தது தொடர்பாக சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பொதுமக்களை கட்டுப்படுத்த தியேட்டரில் தெலுங்கானா போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரீமியர் காட்சிக்கு முன்னதாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த இடத்திற்கு வந்தபோது, அவரது ரசிகர்கள் வெறித்தனமாகச் அவரை பார்க்க அருகில் சென்றனர்.. இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஒரு பெரிய சினிமாவிற்கு.. அதிலும் ரசிக வெறி கொண்ட ஒரு சினிமா உலகில்.. படம் ரிலீஸ் ஆகும் நாளில் பிரிமியர் ஷோவை பார்க்க வெளிப்படையாக செல்வது என்பது எவ்வளவு தவறான விஷயம். ஆனால் அந்த இங்கீதம் கூட இல்லாமல் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றது பெரிய அளவில் சர்ச்சையானது.
அதிலும் அர்ஜுன் வெறுமனே படத்தைப் பார்த்து விட்டுச் செல்லவில்லை. அவர் காரின் சன்ரூஃப்பில் இருந்து வெளியே வந்தார், தனது திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடிய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார், வாழ்த்தினார். இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. இந்த கூட்ட நெரிசலில்தான் ரேவதி என்ற பெண் பலியானார். 9 வயதே கொண்ட அவரின் மகன் ஸ்ரீ தேஜா மூச்சு பாதிப்பு ஏற்பட்டு கோமாவில் உள்ளார்.
இதற்காக கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் உடனே ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரை கைது செய்ய ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.
அல்லு அர்ஜுன் வீட்டில் இருந்து கைது செய்து அழைத்து வரப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் 50,000 ரூபாய் பத்திரத்தில் அவருக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், ஆவணங்கள் தாமதமானதால் அவர் ஒரு இரவை மட்டும் சிறையில் கழித்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுனை பார்க்க பல நடிகர்கள்.. முன்னணி ஹீரோக்கள் அவரின் வீட்டிற்கு சென்றனர். முக்கியமாக அல்லு அர்ஜுன் கைதானது என்னவோ வெறும் 3-4 மணி நேரம். அதற்குள் வெளியே வந்துவிட்டார் அப்படிப்பட்டவரை பார்க்க பல நடிகர்கள் கூடினார்கள். ஆனால் அதில் ஒருவர் கூட இறந்த ரேவதி குடும்பத்தை பார்க்க செல்லவில்லை. அல்லு அர்ஜுன் கூட செல்லவில்லை.
யாருமே கோமாவில் இருக்கும் அந்த சிறுவனை பார்க்க செல்லவில்லை. இந்த நிலையில்தான் புஷ்பா 2 ரசிகை மரண வழக்கில் தெலுங்கானா காவல்துறை அதிகாரிகள் அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர். பெரும்பாலும் இன்று புதிய மேல்முறையீடு மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications