சனாதனத்தை பாதுகாக்க புதிய அணி.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திடீர் அறிவிப்பு!
ஹைதராபாத்: சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வராஹி படை என்ற புதிய அணியை தொடங்குவதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். சனாதன தர்மத்தை சமூகவலைத்தளங்களில் இழிவு செய்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண், சனாதன தர்மத்தை காக்க தனது கட்சியில் புதிய அமைப்பை ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியிருப்பதாவது:-

நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஆனால் நான் எனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன். சனாதன தர்மத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் அவமதிக்கும் வகையில் பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காக கட்சியில் நரசிம்ம வராஹி படை என்ற புதிய அணியை தொடங்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்தததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்திற்கு சனாதன தர்ம விவகாரத்தை பவன் கல்யாண தீவிரமாக கையில் எடுத்துள்ளார். சனாதன தர்மம் மற்றும் அதன் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதை தடுக்கும் வகையில், கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என கடந்த மாதம் பவன் கல்யாண் கோரிக்கை விடுத்து இருந்தார்.
பவன் கல்யாண் கூறுகையில், "சனாதன தர்மத்தை காக்கவும் இழிவுபடுத்துவதை தவிர்க்கவும் கடுமையான தேசிய சட்டம் அவசியம். நாடு முழுவதும் உடனடியாக இதற்கான சட்டத்தை ஏற்ற வேண்டும்" என்றார். சனாதன தர்மம் விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சீண்டும் வகையிலும் பவன் கல்யாண கடந்த மாத துவக்கத்தில் பேசியிருந்தார்.
பவன் கல்யாண் கூறுகையில், "சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி என்றும் அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழகத்தில் ஒருவர் பேசியிருக்கிறார். இதை சொன்னவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது. சனாதன தர்மத்தை அழிக்க முயற்சித்தால், நீங்கள்தான் அழித்து போவீர்கள்.
உங்களைப் போல பலர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் உள்ளது. மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை கிடையாது. இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் . சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. கண்டிக்காவிட்டாலும் தவறு தவறுதான்" என்று கூறியிருந்தார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications