‛‛வெறிச்சோடிய ஹைதராபாத்’’.. திடீரென ஆந்திராவுக்கு படையெடுத்த 50% மக்கள்.. ஓட்டளிக்க ஆர்வத்த பாருங்க
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வசித்து வரும் 50 சதவீத மக்கள் திடீரென்று அந்த நகரை காலி செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்துக்கு இடம்பெயரும் நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஹைதராபாத் சாலைகள் வெறிச்சோடி உள்ளன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயருவதற்கு என்ன காரணம் வாங்க பார்க்கலாம்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திரா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் 11ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் நாளை ஒன்றாக நடைபெற உள்ளது. ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மேலும் பொறுத்தவரை மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 88 இடங்களில் வெல்ல வேண்டும்.
ஆந்திராவில் இந்த ஆண்டு மும்முனை போட்டி உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மாறாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. வேட்பாளர்கள், தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். நேற்று பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
வெறிச்சோடிய ஹைதராபாத்: இந்நிலையில் தான் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானாவில் வசிக்கும் மக்கள் ஆந்திராவை சேர்ந்த மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். எப்போதும் மக்கள் கூட்டத்துடன் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் ஹைதராபாத் ரோடுகள் இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்படுகின்றன. எந்த ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் இல்லை. வழக்கத்தை விட மிக குறைந்த அளவில் தான் வாகனங்கள் செல்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஹைதராபாத்தில் வசிக்கும் மக்களிடம் 50 சதவீதம் பேர் ஆந்திரா சென்றுவிட்டனர். ஹைதராபாத்தை பொறுத்தமட்டில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக வசிக்கின்றனர். இந்நிலையில் தான் தேர்தலில் ஓட்டளிக்க அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு கடந்த ஒரு வாரமாக படையெடுத்து வந்த நிலையில் இன்று மொத்தமாக ஹைதராபாத் வெறிச்சோடியுள்ளது.
அலைமோதும் கூட்டம்: அதேபோல் ஆந்திராவுடன் தெலுங்கனாவை இணைக்கும் விஜயவாடா மற்றும் கர்னூல் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பஸ்களில் மக்கள் நின்று கொண்டே பயணிக்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி தனியார் பஸ்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளன.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்கைள அழைத்து வர கட்சிகள் சார்பில் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத், பெங்களூர், சென்னையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்த பஸ்களில் சொந்த ஊர் திரம்பி செல்கின்றனர். இதுமட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானாவில் இருந்து ஆந்திரா செல்லும் டோல் கேட்டுகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. டோல்கேட்டுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகி உள்ளது.
எத்தனை லட்சம் பேர்: அதன்படி ஆந்திராவுக்கு மட்டும் சுமார் 3 முதல் 5 லட்சம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அரசியல் பார்வையாளர் சிவா ரசர்லா கூறுகையில், ‛‛ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து இடம்பெயரும் மக்கள் ஆந்திர சட்டசபை தேர்தலில் 40-50 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்ய உள்ளனர். அதன்படி கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டங்கள், கடப்பா, ராயலசீமாவில் உள்ள அனந்தபூர், வடக்கு கடலோர மாவட்டங்களில் இவர்களின் ஓட்டு தான் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயம் செய்ய உள்ளது'' என்றார்.
இதுபற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‛‛ஆந்திராவை சேர்ந்த 30 லட்சம் பேர் ஹைதராபாத்தில் உள்ளனர். குறிப்பாக வடக்கு கடலோர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் செக்யூரிட்டிகளாக பணியாற்றி வருகின்றனர். அதேபோல் கட்டட பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எவ்வளவு பேர் ஓட்டளிக்கின்றனர் என்பது தெரியவில்லை. ஆனாலும் எனது கணிப்புப்படி 5 முதல் 10 லட்சம் பேர் ஆந்திரா செல்வார்கள்'' என்றார்.
தெலுங்கானா தேர்தல்: அதேபோல் தெலுங்கானா மாநிலத்திலும் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 17 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தெலுங்கானா லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கவும் பிற மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications