17 வயசு மருமகளை விபச்சாரத்தில் தள்ளி.. கை நிறைய மாத்திரையை அள்ளி.. அத்தை நீலிமாவால் ஆடிப்போன ஆந்திரா
ஹைதராபாத்: காதலில் விழுந்த 17 வயது சிறுமியின் வாழ்க்கையே சீரழிந்துள்ளது.. வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு நேர்ந்த துயரங்கள் ஒவ்வொன்றும் , காவல்துறைக்கும் சேர்த்தே அதிர்ச்சியை தந்துள்ளது.. ஆந்திர மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 17 வயதாகும் இந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்தார். இந்த விஷயம் சிறுமியின் வீட்டுக்கு தெரியவந்தது.. படிப்பில் கவனம் செலுத்தாமல், காதலில் இறங்கியதால், மகளை பெற்றோர் கண்டித்தனர்.. காதலுக்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமி, சந்துவை திருமணமும் செய்து கொண்டார்... திருமணத்திற்கு பிறகு 2 பேரும் பெத்தாபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்..
வலைவீச்சு: இதனிடையே தங்களது மகள் காணாமல் போய்விட்டதால், அவரை கண்டுபிடித்து தரும்படி, பெற்றோர் அனக்கா பள்ளி போலீஸுக்கு சென்று புகார் தந்தார்கள்.. இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் சிறுமியை வலைவீசி தேடினார்கள்.. இறுதியில், பெத்தாபுரத்தில் சிறுமி இருப்பதாக அறிந்து, நேரடியாகவே அங்கு சென்று சிறுமியை மீட்டனர்... அத்துடன், மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக சந்துவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
பிறகு சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால், அவரது பெற்றோர்கள், தங்கள் மகளை ஏற்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார்கள்.. இதனால் மாமியார், அதாவது சந்துவின் அம்மா நீலிமாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.
மாமியார் நீலிமா: ஆனால், இதற்கு பிறகு, மாமியார் நீலிமாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபட வைத்துள்ளனர்.. இதற்காக அடிக்கடி சிறுமிக்கு மயக்க மாத்திரைகளை தந்து, விபச்சாரத்தில் தள்ளியிருக்கிறார்கள்.. அளவுக்கு அதிகமான மாத்திரைகள் காரணமாக, சிறுமியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது... ஒருகட்டத்தில் சிறுமி சுய நினைவை இழந்தார்.
இந்த விஷயம், சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அதற்கு பிறகே பதறியடித்து சென்றிருக்கிறார்கள்.. தங்கள் மகளை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு சிறுமிக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டதையடுத்து, ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.. அப்போது நடந்த விவரங்கள் குறித்து போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர்..
மொத்த குடும்பம்: தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி ஒன்றுவிடாமல் சொன்னதுடன், மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது குறித்தும் விவரித்தார். இதுகுறித்து பெற்றோரும் புகார் செய்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இப்போது ஒட்டுமொத்த குடும்பமும் ஜெயிலில் உள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications