செல்போனில் வந்த மர்ம லிங்கால் 12 லட்சத்தை இழந்த எம்எல்ஏ.. பவன் கல்யாண் ஆதரவாளர் ஏமாந்தது எப்படி
ஹைதராபாத்: பெரிய பதவியில் இருப்பவர்களே இன்று 'ஏ.பி.கே. பைல்' லிங்க்குகளை கிளிக் செய்து பணத்தை இழக்கிறார்கள். ஒரே நொடியில் பணத்தை பறிக்கும் லிங்க் தான் APK File. கவர்ச்சிகரமான அறிவிப்புகள், திட்டங்கள், தள்ளுபடிகள் அல்லது நம்பவே முடியாத ஆஃபர்கள் அந்த லிங்கில் இருக்கும். அப்படி கிளிக் செய்தால் பணம் காலியாகிவிடும். ஆந்திராவில் எம்.எல்.ஏ. ஒருவர் சைபர் மோசடிக்காரர்களிடம் ரூ.12 லட்சத்தை இழந்துள்ளார்..

ஏபிகே பைல் எப்படிப்பட்டது
இன்றைக்கு பணத்தை வழிபறி செய்வதற்கு உங்கள் சட்டையை கிழிக்க தேவையில்லை..உங்களுடன் சண்டை போட தேவையில்லை.. உங்கள் மீது மிளகாய் பொடி வீச வேண்டியது இல்லை.. மொத்தத்தில் உங்களை நேரில் பார்க்காமலேயே, வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உங்கள் பணத்தை வழிபறி செய்ய முடியும்.. அப்படியான வழிபறிகள் நாள்தோறும் நடக்கிறது.
உங்கள் மொபைல் தான் அதற்கான வழியாக இருக்கிறது. உங்கள் மொபைல் போனை ஹேக் செய்தால் போதும். உங்கள் அந்தரங்க தகவல் தொடங்கி, உங்கள் கணக்கில் உள்ள பணம் வரை அனைத்தையும் சுருட்ட முடியும். அப்படியான கோடிங்குகளுடன் கூடிய பைல் தான் ஏபிகே பைல். இது பெரும்பாலும் வாட்ஸ் அப் வழியாகவே வரும்.
பெரிய ஆட்களே இழக்கிறார்கள்
இதனை பயன்படுத்தி தான், செல்போன்களுக்கு மர்மமான குறுஞ்செய்திகள், இணையதள 'லிங்க்' உள்ளிட்டவற்றை அனுப்பி அதன் மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடிப்பார்கள்.. இத்தகைய சைபர் மோசடிக்காரர்களுக்கு எதிராக போலீசார் மற்றும் விசாரணை அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுக்கிறார்கள். அத்துடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இத்தகைய குற்றங்கள் புதிய வழிகளில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் படித்தவர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட சிக்கிவிடுகிறார்கள்.
ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ.
அப்படித்தான் ஆந்திராவில் துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் இத்தகைய மோசடியில் சிக்கி ரூ.12 லட்சத்தை இழந்துள்ளார். ஆந்திராவின் போலாவரம் தொகுதி ஜனசேனா எம்.எல்.ஏ.வான பாலராஜுவுக்கு கடந்த 6-ந்தேதி மர்ம நபர்கள் 'ஏ.பி.கே. பைல்' லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளார்கள். அதை தவறுதலாக பாலராஜு கிளிக் செய்தவுடனே அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.12 லட்சமும் மர்ம நபர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்காளத்தில் எடுத்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேசிய சைபர் குற்றங்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். பின்னர் அந்த புகார் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு கடந்த நேற்று முன்தினம் மாற்றப்பட்டிருக்கிறது.. அதன்படி சைபர் குற்றம் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
APK File
மேலும் பாலராஜுவின் வங்கிக்கணக்கு தரவுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அந்த பணம் மேற்கு வங்காளத்தில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த மோசடியில் சர்வதேச அளவிலான தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு தெரியவந்துள்ளது. தீவிர விசாரணை நடந்து வருகிறது. APK File பொதுமக்கள் எந்த சூழலிலும் கிளக் செய்து டவுன்லோடு செய்யக்கூடாது.. அப்படி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் மொத்தமாக பறிபோய்விடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications