பாஜக ஒரு பிஸினஸ் கட்சி.. வெறுப்பை பரப்பி மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.. விளாசிய ராகுல் காந்தி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி பாஜக கட்சி பிசினஸ் செய்யும் கட்சி என்றும் வெறுப்பை பரப்பி மக்களின் வாழ்க்கையை பாஜக சீரழிக்கிறது என்றும் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை நடைபபயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தனது பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கினார்.

பாரத் ஜோடா யாத்திரை
தமிழகத்தை அடுத்து ராகுல் காந்தி கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டார். அங்குள்ள மக்களை சந்தித்து வந்த ராகுல் காந்தி அதனை தொடர்ந்து கர்நாடகாவில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அங்கு ராகுல் காந்தியின் நடைபயணத்தில் தாயார் சோனியா காந்தியும் சிறிது தூரம் கலந்து கொண்டு கட்சியினருக்கு உற்சாகம் அளித்தார். இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.

தெலுங்கானாவில் ராகுல் காந்தி
தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், பாத யாத்திரைக்கு இடையே பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ராகுல் காந்தி மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் பாஜகையும் தெலுங்கானாவில் ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறியதாவது:-

மக்களின் வாழ்க்கையை சீரழிக்க..
நாட்டில் உள்ள உள்ள நமது சகோதரர்களுக்கு இடையே வெறுப்பை பரப்பி மக்கள் விரோத கொள்கைகள் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை சீரழிக்க பாஜக நினைக்கிறது. டெல்லியிலிருது பாஜக இதை செய்கிறது என்றால் தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்-உம் இதை செய்கிறது. இந்த இரு கட்சிகளுமே ஒன்றுதான். ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு கட்சிகளுமே அரசியல் கட்சிகள் கிடையாது.

பிசினஸ் செய்யும் கட்சிகள்
மாறாக பிசினஸ் செய்யும் கட்சிகள். எளிய மக்களை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால் பணக்காரர்களின் நலனில் தான் அக்கறை உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டது. பாஜக கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு சந்திரசேகர் ராவ் ஆதரவு அளித்தார். அடிப்படை விவசாய பொருட்களுக்கு கூட 18 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கபட்டுள்ளது" என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications