தெலுங்கானாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி! தொலைதூரத்தில் பாஜக! கேசிஆர் நிலை அதை விட மோசம்! புது சர்வே
ஹைதராபாத்: நாடு முழுக்க இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தெலுங்கானாவில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து புதிய சர்வே முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு சில வாரமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது.

தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
தெலுங்கானா: இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து லோக்போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் தான் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், அதைத் தக்க வைக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் 17 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் ஒற்றை நம்பிக்கை கர்நாடகாவிலும் பாஜகவுக்கு பின்னடைவு? அதிரவைக்கும் கருத்து கணிப்பு
யாருக்கு வெற்றி: காங்கிரஸ் கட்சி அங்கே மொத்தமுள்ள 17 சீட்களில் 10 முதல் 12 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல பாஜக அங்கே 2 முதல் 4 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பிஆர்எஸ் கட்சியின் நிலை தான் ரொம்பவே மோசம். கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த பிஆர்எஸ் வெறும் 1 அல்லது 2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவைசியின் மஜ்லீஸ் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி தான் அதிகபட்ச இடங்களைப் பெற்றது. அந்த தேர்தலில் பிஆர்எஸ் 17இல் 9 இடங்களில் வென்றது. பாஜக 4 இடங்களில் வென்ற நிலையில், மஜ்லீஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றது. காங்கிரஸ் அந்தத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. ஆனால், இந்த முறை அங்கு நிலை மொத்தமாக மாறும் என்றும் காங்கிரஸ் தான் அதிகபட்ச இடங்களைப் பெறும் என்றும் லோக்போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் மொத்தம் இருக்கும் 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 13ஆம் தேதி நடக்கிறது. அங்கே காங்கிரஸ், பிஆர்ஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. இது தவிர ஒவைசியின் மஜ்லீஸ் கட்சியும் தனித்து களமிறங்குகிறது.












Click it and Unblock the Notifications