தென்னிந்தியாவின் ஒற்றை நம்பிக்கை கர்நாடகாவிலும் பாஜகவுக்கு பின்னடைவு? அதிரவைக்கும் கருத்து கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் என Lok Poll கருத்து கணிப்புகள் தெரிவித்திருப்பது டெல்லி பாஜக மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் வட இந்தியாவில் பாஜக அதிகமான இடங்களைக் கைப்பற்றும்; பல வட மாநிலங்களில் அத்தனை இடங்களையும் கூட பாஜக கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது என்கின்றன தேர்தல் கருத்து கணிப்புகள். ஆனால் தென்னிந்திய மாநிலங்களின் களநிலவரமே வேறானது.

தென்னிந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானாவில் பாஜக அப்படி எளிதாக வெல்ல முடியாது என்பதுதான் பொதுவான தேர்தல் கருத்து கணிப்புகள். இதில் கர்நாடகா மாநிலத்தில் பாஜக எப்போதும் டபுள் டிஜிட் இடங்களைக் கைப்பற்றும்.
இந்த நிலையில் Lok Poll வெளியிட்ட கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லோக்போல் வெளியிட்ட கருத்து கணிப்பு விவரங்கள்:
கர்நாடகா மொத்த இடங்கள் : 28
காங்கிரஸ் 12 - 14 இடங்கள்
பாஜக 10 - 12 இடங்கள்
ஜேடிஎஸ் 1- 2 இடங்கள்

கர்நாடகாவில் இம்முறை காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இத்தேர்தல் கருத்து கணிப்பு.
கேரளாவில் மொத்த இடங்கள் 20
காங்கிரஸ்
18 - 20
பாஜக 0 - 1
கேரளாவில் ஒட்டுமொத்த இடங்களையும் காங்கிரஸ்தான் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

இதேபோல தெலுங்கானாவிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவுதான் காத்திருக்கிறது இக்கருத்து கணிப்பு.
தெலுங்கானா மொத்தம் 17 இடங்கள்
காங்கிரஸ் 10 - 12
பாஜக 2 - 4
பிஆர்எஸ் 1 - 2
இதர கட்சிகள் 0 - 1
ஒட்டுமொத்தமாக இம்முறை தென்னிந்தியாவில் பாஜகவால் குறைந்தது 20 இடங்களைக் கூட கைப்பற்ற முடியாது என்பதையே இதுவரையிலான தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications