நாட்டில் ஜூலை 4இல் தொடங்கிய 3ஆம் அலை?எல்லா தரவுகளும் அதையே காட்டுகிறது.. ஹைதராபாத் ஆய்வாளர் வார்னிங்
ஹைதராபாத்: கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் வைரஸ் பாதிப்பு எப்படி இருந்ததோ, அதேபோலவே ஜூலை 4ஆம் தேதி முதல் வைரஸ் பாதிப்பு உள்ளது என்றும் இது கொரோனா 3ஆம் அலை நாட்டில் தொடங்கிவிட்டதையே காட்டுவதாகவும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கடந்த சில மாதங்களாகவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. டெல்டா கொரோனா வகையே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
கொரோனா 2ஆம் அலையே இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், மூன்றாம் அலை குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன.

ஜூலை 4
இந்நிலையில், கொரோனா 3ஆம் அலை குறித்து ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "நாட்டில் கொரோனா பரவல் ஏற்படத் தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதம் எப்படி இருந்ததோ, அதேபோலத் தான் கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் கொரோனா கேஸ்களும் இறப்புகளும் நாட்டில் பதிவாகத் தொடங்கியுள்ளன. இது கவலையளிக்கும் செய்தி.

அதிகரிக்கும்
பொதுமக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது, வேக்சின் எடுத்துக் கொள்வது ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால் கொரோனா 3ஆம் அலை நாட்டில் விரைவில் அதிகரிக்கத் தொடங்கும்" என அவர் எச்சரித்துள்ளார். நாட்டில் கடந்த 461 நாட்களாக பதிவான கொரோனா பாதிப்பு, இறப்புகள் ஆகியவற்றை டாக்டர் விபின் ஸ்ரீவாஸ்தவா வரைபடங்களில் பதிவு செய்து வைத்துள்ளார்.

DDL- Daily Death Load
அதில் நாட்டில் தினசரி உள்ள ஆக்டிவ் கேஸ்கள், பதிவாகும் கொரோனா உயிரிழப்புகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கிராப்களை உருவாக்கியுள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தினசரி கொரோனா பாதிப்பைவிட அதிகமாக இருந்தால், இது நெகடிவ் ஆக இருக்கும். அதாவது கொரோனா நிலைமை மெல்லக் கட்டுக்குள் வருவதையே காட்டுகிறது. இதை அவர் DDL- Daily Death Load என்று அழைக்கிறார். ஆனால், இம்மாத தொடக்கத்தில் இருந்தே இது அதிகரித்து வருகிறது.
Recommended Video

கொரோனா 3ஆம் அலை
கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட போது இந்த DDL எப்படி இருந்ததோ, அதேபோலத் தான் கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுருங்கச் சொன்னால், நாட்டில் கடந்த ஜூலை 4ஆம் தேதி முதலே கொரோனா 3ஆம் அலை தொடங்கிவிட்டதைக் காட்டும் வகையிலேயே அந்த வரைபடங்கள் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications