தெலுங்கானா: பிஆர்எஸ்-க்கு ஹாட்ரிக் வெற்றி; நிராசையாகும் காங். ஆட்சி கனவு- பாஜக 'அதோ கதி'-புது சர்வே!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் என Democracy Times Network கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள். தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தெலுங்கானா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானா சட்டசபையில் தற்போது ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு 99; காங்கிரஸ் கட்சிக்கு 7; பாஜகவுக்கு 3 ; ஓவைசி மஜ்லிஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தெலுங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் இதுவரை முரண்பாடாக வந்துள்ளன. தெலுங்கானாவில் பிஆர்எஸ் ஆட்சி அமைக்கும்ல் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை காங்கிரஸிடம் பறி கொடுக்கும்; தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் என 3 விதமான கருத்து கணிப்பு முடிவுகள் இதுவரை வெளியாகி இருக்கின்றன.
தற்போது Democracy Times Network, தெலுங்கானாவின் 119 தொகுதிகளின் கள நிலவரத்தையும் ஆராய்ந்து கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் எந்த கட்சிக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும்? என்பதையும் விவரமாக இந்த கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒட்டுமொத்தமாக தெலுங்கானாவில் மீண்டும் பிஆர்எஸ் கட்சி அமைக்கக் கூடும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
Democracy Times Network கருத்து கணிப்பு முடிவுகள்:
ஆளும் பிஆர்எஸ் கட்சி: 67 இடங்கள் (41%)
காங்கிரஸ்: 40 இடங்கள் (35%)
பாஜக- 06 இடங்க (13%)
ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி : 06 இடங்கள் (3%) என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் தாங்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளே தேர்தலிலேயே எதிரொலித்ததாகவும் Democracy Times Network தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications