"எய்ட்ஸ்" இருக்குடி உனக்கு.. சரணுக்கு ஒரு மனைவி.. அப்பறம் இன்னொரு பெண்.. குறுக்கே வந்த டாக்டர்.. ஐயோ
மனைவிக்கு எய்ட்ஸ் ஊசியை செலுத்திய கணவனிடம் விசாரணை துவங்கி உள்ளது
ஹைதராபாத்: கள்ளக்காதலியை திருமணம் செய்ய, பயங்கரமான காரியத்தை செய்த கணவனையும், அதற்கு உடந்தையாக இருந்த டாக்டரிடமும் விசாரணையை துவக்கி உள்ளனர் ஆந்திர மாநில போலீசார்.
ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளியை சேர்ந்தவர் சரண்.. 40 வயதாகிறது.. இவரது மனைவி மாதவி.. 35 வயதாகிறது.. பல வருடமாக தீவிரமாக காதலித்து மாதவியை திருமணம் செய்து கொண்டார் சரண்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற குடும்ப வாழ்க்கை, கடந்த சில வருடங்களாகவே முட்டலும் மோதலுமாக நகர்ந்துள்ளது.. தம்பதிக்குள் கருத்து வேறுபாடு காரணமாகவே தகராறுகள் வந்துள்ளன..

பலஹீனம்
ஒருகட்டத்தில் மாதவியை அடித்து துன்புறுத்தி உள்ளார் சரண்.. நாளுக்கு நாள் சரணின் அடாவடிகள் அதிகரித்துள்ளன.. இதற்கு நடுவில், மாதவிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. வழக்கத்துக்கு மாறாக உடல் பலவீனத்துடன் காணப்பட்டார்.. மன உளைச்சல் காரணமாக இப்படியெல்லா உடலில் வலிமையிழந்து இருக்கலாம் என்று நினைத்தார். ஆனாலும், வீக்னஸ் அதிகமாக இருக்கவும், மாதவி செக்கப்புக்காக மருத்துவமனை சென்றுள்ளார்.. அப்போது அவருக்கு எல்லா டெஸ்ட்களும் எடுக்கப்பட்டன.. இறுதியில், அவருக்கு எச்ஐவி பாசிட்டிவ் என்று ரிசல்ட் வரவும் அதிர்ந்து போய்விட்டார்..

டார்ச்சர்
தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு வர காரணமே இல்லையே? தனக்கு எப்படி அந்த நோய் வந்திருக்கும் என்று பதற்றமானார்.. பிறகு, கணவர் மீது லேசாக சந்தேகம் வரவும், உடனடியாக போலீசில் புகார் தந்தார். அப்போதுதான், கடந்த 4 வருட காலமாகவே, மாதவியை அளவுக்கு அதிகமாக சரண் கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்தது.. இதற்கெல்லாம் காரணம், வரதட்சணை பிரச்சனை என்றும் சொல்லப்பட்டாலும், விவகாரமே வேறு என்கிறார்கள் போலீசார். சரணுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு 21 வயதாகிறது.. இந்த விஷயம் மாதவிக்கும் தெரியவந்துள்ளது..

சிசு கர்ப்பம்
இதனால் எரிச்சலடைந்த சரண், மாதவியை துன்புறுத்த துவங்கி உள்ளார்.. தன்னைவிட்டு பிரிந்து போய்விடுமாறும் மிரட்டி வந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில், மாதவி கர்ப்பமாகி உள்ளார்.. உடனே ஆண் குழந்தைதான் வேண்டும் என்று தகராறு செய்ய ஆரம்பித்ததுடன், வயிற்றில் உள்ளது ஆணா? பெண்ணா? என்றும் ஸ்கேன் செய்துள்ளார்.. மனைவியின் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று உறுதியானதும், மறுபடியுமை கடுப்பான சரண், ஒரு பெண் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார்.. எச்ஐவி ஊசியையும் மனைவிக்கு செலுத்த சொல்லி உள்ளார்..

HIV ஊசி
இது என்ன ஊசி என்று மாதவி கேட்டதற்கு, சத்து ஊசி என்று சொல்லி உள்ளார். மனைவிக்கு எச்ஐவி இருப்பதாக சொல்லி, அவரை டைவர்ஸ் செய்துவிடலாம் என்பதற்காகவே, இப்படி ஒரு யோசனையை சரண் செயல்படுத்தி உள்ளார்.. இவ்வளவு தகவல்களையும் மாதவி தாடேப்பள்ளி போலீசில் தெரிவித்ததையடுத்து, போலீசார் சரணை கைது செய்தனர்.. அத்துடன் சரணிடம் விசாரணை ஆரம்பமானது.. அப்போது பல தகவல்கள் வெளியாகி உள்ளன.. சரண் - மாதவி தம்பதிக்கு 5 வயதில் ஒரு ஒரு பெண் குழந்தை உள்ளது..

எய்ட்ஸ்
ஆனாலும், ஆண் குழந்தை ஏக்கம் சரணுக்கு இருந்து வந்துள்ளது.. அதனால் மாதவியிடம், என்னுடைய 2 தம்பிகளுக்கும் ஆண் குழந்தைகள் இருக்கின்றன.. இந்து சம்பிரதாயத்தின்படி, நாம இறந்துவிட்டால், மகன் தான் இறுதி சடங்கு செய்யவேண்டும்... இதற்காகவாவது ஆண் குழந்தை எனக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.. பிறகுதான், வயிற்றில் உள்ளது பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்ட சரண், மங்களகிரியை சேர்ந்த ஆர்எம்பி டாக்டர் ரமாதேவியிடம் சென்றுள்ளார்.. மாதவி பற்றி எல்லா விஷயத்தையும் எடுத்து சொல்லி, அந்த டாக்டரிடம் அழைத்து சென்றுள்ளார்..

சத்துஊசி
மாதவிக்கு 3 முறை நரம்பில் ஊசி போடப்பட்டுள்ளது.. சத்து மருந்து என்று சொல்லியே 3 முறையும் அந்த ஊசி போட்டுள்ளனர்.. இந்த ஊசி போட்ட பிறகுதான், மாதவிக்கு களைப்பும், சோர்வும் அதிகமாகி உள்ளது. எழுந்து நடமாட கூட முடியாத அளவுக்கு பலவீனமாகிவிட்டதால்தான், தானாகவே மெடிக்கல் செக்கப்புக்கு சென்றுள்ளார்.. சரணின் கள்ளக்காதலி விசாகப்பட்டினத்தை சேர்ந்தவராம்.. அந்த பெண்ணை முறைப்படி மணக்க வேண்டும் என்பதற்காகவே, வரதட்சணை கொடுமை, எச்ஐவி ஊசி என ஒவ்வொரு பயங்கரத்தையும் செய்து வருவதாக புகாரில் மாதவி சொல்லி உள்ளார்.

விஷ ஊசி
இப்போது டாக்டர் ரமாதேவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்த ரமாதேவி, ஆர்எம்பி டாக்டர் என தற்போது தெரியவந்துள்ளது,. எச்ஐவி விஷமருந்து, ரமாதாவியிடம் இருந்ததா? அல்லது சரண் கொண்டுபோய் அவரிடம் தந்தாரா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.. இதைதவிர, அந்த பெண்ணின் குற்றச்சாட்டில் உண்மை தன்மையை கண்டறியும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விவாகரத்துக்கு காரணம் வேண்டும் என்பதால், வேண்டுமென்ற ஹெச்ஐவியை மனைவியின் உடலில் ஹெச்ஐவி வைரஸ் தொற்றை செலுத்தியுள்ள இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கம்ப்ளைண்ட்
"என் கணவருக்கு விசாகப்பட்டணத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணுக்காக என்னை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார். அதற்கு தகுந்த காரணத்தை தேடியவர், என்னுடைய ஆரோக்கியத்துக்காக சத்தான ஊசி போடவேண்டும் என அழைத்துச் சென்று எச்ஐவி பாதித்த ரத்தத்தை எனக்கு செலுத்தியிருக்கிறார். எனக்கு உடல்நலப் பரிசோதனை நடந்தபோதுதான் எனக்கு எச்ஐவி இருப்பது தெரியவந்தது. எனக்கு வேண்டுமென்றே எச்ஐவி பாதித்த ரத்தத்தை செலுத்தி, எனக்கும் என் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திய என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த பெண் தன்னுடைய புகாரில் தெரிவித்திருந்த நிலையில், அந்த கணவர் கைதாகி உள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட நிலையில், மேற்கொண்டு அவருக்கான மருத்துவ பரிசோதனைகளை எடுக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கி உள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications