நெஞ்சே நடுங்குதே.. மொட்டை மாடி பாத்ரூமில் அந்த பெண்.. இன்னுமா இதெல்லாம் நடக்குது.. கொடுமையை பாருங்க
ஹைதராபாத்: சைக்கோ கணவனின் செயல்பாடுகளை கண்டு, ஆந்திர மாநிலமே அதிர்ந்து போயுள்ளது.. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
பெண் சிசு கொலைகள் அந்த காலத்தைவிட இப்போது குறைந்துள்ளது என்றாலும், முற்றிலும் குறையவில்லை.. வடமாநிலத்திலும் இப்படியான கொடூரம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பெண் குழந்தைகள் வளர்ப்பு குறித்த புரிதல் இல்லாததால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் இல்லாததால்தான் அக்குழந்தைகளை பிஞ்சிலேயே கொல்ல துணிகிறார்கள்..

கருக்கலைப்பு: பிறந்த குழந்தை என்று கிடையாது, பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற பயத்தில் கூட கருக்கலைப்பு நடந்துள்ளது.. அந்த கருக்கலைப்பினால், இளம்தாய்மார்களுக்கும் உயிருக்கு ஆபத்தும் நிகழ்ந்திருக்கிறது. இப்போது ஒரு கொடூரம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது பாருங்கள். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்எம் சந்த் பாஷா.. இவர், பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி பெயர் சபீஹா.. பலமனேர் நகரைச்சேர்ந்தவர்.. கடந்த 2017-ல் இவர்களுக்கு கல்யாணமாகி உள்ளது.. 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்துவிட்டதால், கடுப்பிலும், ஆத்திரத்திலும் இருந்தாராம் பாஷா..
சபீஹா: இதனால், சபீஹாவை, பாஷாவும், அவரது பெற்றோரும், சகோதரிகளும் என ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து சித்ரவதை செய்துள்ளனர். அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார்கள். இதனால், சபீஹா அடிக்கடி தன்னுடைய அம்மா வீட்டுக்கு அழுதுகொண்டே போயுள்ளார்.. அவர்களும் போலீசில் இது தொடர்பாக புகார் தந்துள்ளனர்.. போலீசாரும், சபீஹாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.. 3 முறை கணவன் மீது புகார் தந்தும், 3 முறையுமே சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஆண் குழந்தை: இப்படிப்பட்ட சூழலில், ஆண் குழந்தை கட்டாயம் தேவை என்ற முடிவுக்கு பாஷா குடும்பத்தினர் வந்துள்ளனர்.. இதற்காக இன்னொரு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.. பாஷாவுக்கு கடந்த மாதம் முதல், குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.. மேலும், மொட்டை மாடிக்கு சபீஹாவை அழைத்து சென்று, அவரது கை விரல்களை உடைத்துள்ளனர்..
மாடியிலேயே ஒரு தனி குட்டி அறையில் அடைத்துவைத்துள்ளனர்.. சாப்பாடுகூட தரவில்லையாம்.. அந்த ரூமிலேயே ஒரு பாத்ரூம் இருக்கிறதாம்.. அந்த பாத்ரூமிலுள்ள குழாயில் இருந்து தண்ணி பிடித்து குடித்து, உயிர் வாழ்ந்துள்ளார்.. கொஞ்ச நாட்களாகவே, சபீஹாவை காணோமே, வெளியில் அவர் வராமல் இருப்பதை பார்த்து, அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது.
சித்ரவதை: அதனால், சபீஹாவின் பெற்றோருக்கு தகவல் தந்துள்ளனர். அவர்களும் பதறியடித்துக்கொண்டு வந்து, பலமனேர் போலீசாரிடம் புகார் தந்தனர்.. அதற்கு பிறகு போலீசார் அங்கு சென்று பார்த்தபோதுதான், விரல்களை துண்டித்து, சாப்பாடு போடாமல் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது..

போலீசார் சபீஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு சிகிச்சையும் நடந்து கொண்டிருக்கிறது.. அப்போது அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பாஷா குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications