கைவிடுமோ திமுக? கேசிஆர் கூட்டணியில் ஐக்கியமா? ஸ்டாலினுக்கு குமாரசாமி விடுத்த அழைப்பால் காங். பீதி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகராவின் (கேசிஆர்) புதிய தேசிய கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி தல்லைமையிலான கூட்டணியில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இணைய வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தலைவரும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை (டிஆர்எஸ்) பாரத் ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) என மாற்றம் செய்து தேசிய அரசியலில் காலடி வைத்துள்ளார் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) . தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் டிஆர்எஸ் கட்சிக்கு எதிர் களத்தில் காங்கிரஸ், பாஜக நிற்கின்றன. அதனால் தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைப்பதில் கேசிஆர் தீவிரம் காட்டி வந்தார்.

காங்கிரஸ் தவிர்த்த இதர மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரை கேசிஆர் சந்தித்து பேசியிருந்தார். இதன் அடுத்த கட்டமாக தமது டிஆர்எஸ் மாநில கட்சியை பிஆர்எஸ் என்ற தேசிய கட்சியாக மாற்றி உள்ளார்.

 பிஆர்எஸ் தொடக்க விழா

பிஆர்எஸ் தொடக்க விழா

பிஆர்எஸ் கட்சி தொடக்க விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தமது ஜேடிஎஸ் கட்சியின் 20 எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொண்டார். தமிழகத்தில் இருந்து திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.

ஸ்டாலினுக்கு குமாரசாமி அழைப்பு

ஸ்டாலினுக்கு குமாரசாமி அழைப்பு

இந்நிகழ்ச்சியில் பேசிய குமாரசாமி, 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து களம் காண்போம். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் காங்கிரஸ், பாஜக ஆதிக்கம் அல்லாத அரசியல் சூழ்நிலை உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு வியூகம் வகுப்போம் என்றார். அப்போது, திமுக தலைவரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிஆர்எஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

 குமாரசாமியின் அரசியல் கணக்கு

குமாரசாமியின் அரசியல் கணக்கு

குமாரசாமியைப் பொறுத்தவரையில் கர்நாடகாவில் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் வாக்குகள்தான் அவரது ஜேடிஎஸ் கட்சிக்கான வாக்கு வங்கி. ஆனால் ஒக்கலிகா கவுடா சமூகத்திலும் ஜேடிஎஸ்-க்கான செல்வாக்கு சரிவை கண்டு வருகிறது. அத்துடன் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக டிகே சிவக்குமார் நியமிக்கப்பட்டது முதல் இது மிகப் பெரும் அச்சுறுத்தலாகிவிட்டது ஜேடிஎஸ் கட்சிக்கு. டிகே சிவக்குமார் ஒக்கலிகா கவுடா சமூகத்தை சேர்ந்தவர். டிகே சிவகுமாருக்கு ஒக்கலிகா சமூகத்தில் செல்வாக்கு அதிகம் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கே அதிக வாய்ப்பு என்பது கர்நாடகா அரசியல் பார்வையாளர்கள் கருத்து. இதனை சமன் செய்யும் வகையில் தெலுங்கானா- ஆந்திரா எல்லை பகுதி வாக்குகளை பெற கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியுடனான கூட்டணி உதவும் என்பது குமாரசாமியின் கணக்கு. அதனால்தான் பிஆர்எஸ் கூட்டணியில் முதல் இடம் பிடித்திருக்கிறார் குமாரசாமி என கூறப்படுகிறது.

 காங். பீதி

காங். பீதி

இதுஒருபுறம் இருக்க கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி தொடக்க விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றிருப்பது, முதல்வர் ஸ்டாலினுக்கு குமாரசாமி அழைப்பு விடுத்திருப்பது பல கேள்விகளை காங்கிரசார் மத்தியில் எழுப்பி உள்ளது. தேசிய அரசியலில் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; ஆனால் காங்கிரஸோ எங்களை விட்டால் உங்களுக்கு நாதி இல்லை என்று மாநில கட்சிகளை மிரட்டி வருகிறது. தற்போதுவரை காங்கிரஸ் கட்சியுடன் திமுகவுக்கு நல்லுறவு நீடித்து வருகிறது. ராகுல் காந்தியின் கன்னியாகுமரி- காஷ்மீர் பாதயாத்திரையை கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்திருந்தார். ஆனால் இதே அரசியல் சூழ்நிலை தொடருமா? என்பதை யாரும் உறுதியாக சொல்லவும் முடியாது. தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் அணியிலோ அல்லது பிஆர்எஸ் தலைமையிலான கூட்டணியிலோ திமுக இடம்பெற்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எந்த பிடிமானமும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கவேண்டுமே என பீதியடைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+