மட்டன் கடையில் அதென்ன "கருப்பா"? கிட்ட போய் பார்த்தால்? நிலைகுலைந்த மக்கள்.. யாரந்த கறிக்கடைக்காரர்?
ஹைதராபாத்: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.. இதைப்பார்த்த பலரும், சம்பந்தப்பட்ட கறிக்கடைக்காரை சரமாரியாக திட்டி தீர்த்து வருகிறார்கள். என்ன காரணம்?
சில மாதங்களுக்கு முன்பு, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில், காக்கா பிரியாணி தயாரித்து வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.. குறிப்பாக, புறநகர் பகுதிகளில், கோழி, மட்டனுக்கு பதிலாக, காக்கைகளை வைத்து உணவு தயாரித்து விற்பதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவின. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகளும் இது தொடர்பான ஆய்வுகளை உடனடியாக மேற்கொண்டிருந்தனர்.

அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, பொள்ளாச்சி அடுத்த பெரியக் கவுண்டனூர் பகுதியில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடக்கவும், காக்கா பிரியாணிக்காக காகங்கள் வேட்டையாடப்படுகிறதா? என்ற கலக்கமும் கொங்கு பகுதியில் சூழ்ந்திருந்தது.
காகங்கள்: அந்தவகையில், காகங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், காகங்களுக்கு எந்தவிதமான துன்புறுத்தல்களும் இருக்கக்கூடாது என்பதற்காகவே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி சாலையோர உணவகங்களிலும், இறைச்சி கடைகளிலும் அதிரடி ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில், ஆந்திர மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்து இணையத்தில் பகீரை கிளப்பி விட்டுள்ளது.. அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில், தபிபக்கா என்ற பகுதியில் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. நகரின் மிக முக்கியமான மார்க்கெட் என்பதால், இது எந்நேரமும் பரபரப்புடனேயே காணப்படும்.

இறைச்சி துண்டு: இந்த மார்க்கெட்டிலேயே வரிசையாக இறைச்சி கடைகளும் செயல்பட்டு வருகின்றன.. இந்த கடைகளில் வெட்டப்படும் இறைச்சி துண்டுகளை, காகங்கள் திடீரென பறந்து வந்து தூக்கி சென்றுவிடுவதாக சொல்லப்படுகிறது.. எவ்வளவுதான் கண்ணும்கருத்துமாக கடையை கண்காணித்து வந்தாலும், காகங்கள் திடீரென பறந்து இறைச்சிகளை கொத்திக் கொண்டு போய்விடுகிறதாம். இதனால், காகங்கள் மீது கறிக்கடைக்காரர்கள் கொந்தளிப்பில் இருந்தார்கள்.
இந்நிலையில், நேற்றைய தினமும் ஒரு காக்கா மார்க்கெட் பகுதிக்கு வந்து, இறைச்சியை எடுக்க முயன்றுள்ளது.. ஆனால், அங்கிருந்த கறிக்கடைக்காரர் ஒருவர், திடீரென அந்த காக்காவை லபக்கென பிடித்துவிட்டார்.. அந்த காக்கா பறந்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக, ஒரு கம்பியில் காக்காவை கட்டிவைத்துவிட்டார்.. உடனே அந்த காக்கா, பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டது..
அபயக்குரல்: காக்காவின் குரல் வித்தியாசமாக அலறுவதை கேட்டும், மற்ற காக்காக்கள் அங்கு உடனடியாக பறந்து வந்தன.. கம்பியால் கட்டப்பட்டிருந்த காக்கா, தொடர்ந்து அபயக்குரலை எழுப்பி கொண்டேயிருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம், அந்த கறிக்கடையை காகங்கள் கூட்டம் சுற்றிவளைத்தன. ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட காகங்கள் அங்கு வந்து குவிந்துவிட்டதால், மார்க்கெட்டுக்கு வந்த பலரும் பதறிப்போனார்கள்.. காக்காவை இப்படி கட்டிவைத்து துன்புறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள்..
வீடியோ: கஸ்டமர்கள் அனைவரும் இப்படி சொன்னதால், வேறுவழியின்றி அந்த கறிக்கடைக்காரர், கம்பியால் கட்டி தொங்கவிட்டிருந்த காக்காவை விடுவித்தார்.. இந்த சம்பவத்தின் வீடியோதான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், இணையவாசிகள், காகத்தை கட்டிப்போட்ட கறிக்கடைக்காரை கடுமையாக திட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications