கோட்டா சீனிவாச ராவ் வாழ்க்கையில் இத்தனை சோகமா? ஸ்போர்ட்ஸ் பைக்கால் பறிபோன "சாமி" வில்லனின் சந்தோஷம்!
ஹைதராபாத்: சாமி படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் கோட்டா சீனிவாச ராவ் அண்மையில் ஆந்திர மாநில தேர்தலில் வாக்களிக்க வந்த போது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியதற்கு காரணம் வயோதிகம் மட்டுமில்லை என்றும் தனது ஒரே மகனை இழந்த சோகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக மிரட்டியவர் கோட்டா சீனிவாச ராவ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் நல்ல பாடகரும் கூட! இவர் 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த பிராணம் கீரகிடு என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார்.

அந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது வில்லத்தனத்திலும் ஒரு காமெடி இருக்கும். தமிழில் 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தில் தமிழில் அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து குத்து, ஏய் , திருப்பாச்சி, பெருமாள், ஆல் இன் ஆல் அழகுராஜா, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் இவர் அரசியலிலும் கவனம் செலுத்தி இருந்தார். அந்த வகையில் இவர் 1999ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் எம்எல்ஏவாகவும் இருந்தார்.
இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த மாநில சட்டசபை தேர்தலும் மக்களவை தேர்தலும் நடந்தது. அப்போது நடிகர் கோட்டா சீனிவாச ராவும் வாக்களிக்க வந்திருந்தார். அவருக்கு இப்போது 81 வயதாகிறது. ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு தள்ளாடியபடி வந்திருந்தார். அவரை உதவியாளர் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு வந்திருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. சாமி படத்தில் விக்ரமை மிரட்டிய வில்லனா இப்படி இருக்கிறார் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்தான் அவருக்கு தமிழில் டப்பிங் பேசிய நடிகர் ராஜேந்திரன் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில், கோட்டா சீனிவாச ராவ் ஓட்டு போட வந்த வீடியோவை நானும் பார்த்தேன்.
பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர் பார்ப்பதற்கு டெரர் மாதிரி இருப்பார். ஆனால் பழகினால்தான் அவர் தங்கமானவர் என்பது தெரியும். எம்எல்ஏவாக இருந்தாலும் எளிமையாக இருப்பார். அவருடைய கண் முன் அவருடைய ஒரே மகனை விபத்தில் இழந்துவிட்டார். இதுதான் அவரை மனதளவில் மிகவும் பாதித்திருக்கிறது.
அவருடைய மகன் ஸ்போர்ட்ஸ் பைக் கேட்டார். இதனால் வெளிநாட்டிலிருந்து வாங்கிக் கொடுத்தார். புதிதாக வண்டி வந்ததும் குடும்பத்துடன் ஒரு ஹோட்டலுக்கு பார்ட்டிக்காக சென்றார்கள். எல்லாருமே காரில் போய் கொண்டிருந்தார்கள். பையன் மட்டும் காருக்கு முன்பு புதிய பைக்கில் போய் கொண்டிருந்தார்.
கோட்டாவும் அவருடைய குடும்பத்தினரும் தனது மகனின் மகிழ்ச்சியை ரசித்து வந்தனர். அப்போது ஒரு வேன் வந்து அவருடைய பைக்கின் மீது மோதியது. இதனால் அந்த ஸ்பாட்டிலேயே அவருடைய மகன் இறந்துவிட்டார். அப்போதே அவருடைய மனம் அதிகளவு பாதிக்கப்பட்டுவிட்டது. இத்தனை பெயர், புகழ், பணம், சொத்து, சுகம் இருந்தும் தனது மகனை இழந்துவிட்டோமே என தினம் கண்ணீர் வடித்து வருகிறார். இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்தார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications