Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.." காவல் ஆணையர் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேருந்து விபத்தில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இளைஞர் ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதே இதற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் மிக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மிக மோசமான ஒரு பேருந்து விபத்து ஏற்பட்டது. பேருந்தின் மீது பைக் மோதிய நிலையில், அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் எச்சரித்துள்ளார்.

Drunk Drivers Are Terrorists Hyderabad Police Commissioner After Andhra Pradesh Bus Fire accident

பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள்

அதாவது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்றும் அப்படி வாகனம் ஓட்டுவோர் மீது ஹைதராபாத் போலீஸ் எந்தவிதக் கருணையும் காட்டாது என்றும் சஜ்ஜனார் உறுதியாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள் தான். அவர்களது செயல்கள் என்பது பயங்கரவாதச் செயல்களுக்குச் சற்றும் குறையாதவை தான்.

கர்நூலில் நடந்த பேருந்து விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் உண்மையில் அதைச் சாதாரண ஒரு விபத்தாகக் கருத முடியாது.. அது தடுக்கக்கூடிய ஒரு படுகொலை. போதையில் இருந்த ஒரு பைக் ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலால் இது நிகழ்ந்துள்ளது. இது சாதாரண ஒரு சாலை விபத்து அல்ல... பல குடும்பங்களை அழித்த கிரிமினல் அலட்சியச் செயல்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மதுபோதை

கர்நூல் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் பி. சிவா சங்கர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலை 2:24 மணிக்கு அவர் பெட்ரோல் நிரப்புகிறார். அந்த வீடியோவில் அவர் போதையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பின்னர் 2:39 மணிக்கு மதுபோதையில் வண்டியை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிவா சங்கர் உடன் சேர்த்து மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர்.

எதிர்காலத்தை அழிக்கிறார்கள்

ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் மேலும் கூறுகையில், "குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒவ்வொரு நபரும் பயங்கரவாதிகள் தான் என்ற எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். அவர்கள் அப்பாவி மக்களின் வாழ்க்கையையும், குடும்பங்களையும், எதிர்காலத்தையும் அழிக்கிறார்கள். இத்தகைய செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக ஹைதராபாத் காவல்துறை கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. அப்பாவி மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு எந்தவிதமான சலுகையோ, விதிவிலக்கோ, கருணையோ இருக்காது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை வெறும் தவறு என்று சொல்வதை நாம் நிறுத்த வேண்டும். அது வாழ்க்கையைச் சிதைக்கும் ஒரு குற்றம், அதற்கேற்பத் தண்டிக்கப்பட வேண்டும்" என்று காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார்.

என்ன நடந்தது

கர்நூல் பேருந்து விபத்தைப் பொருத்தவரை போதையில் பைக் ஓட்டிய ஒருவரின் அலட்சியமே பல உயிர்களைப் பறித்துள்ளது.. சிவா சங்கரும், எர்ரி சுவாமி ஆகிய இரு இளைஞர்கள் இரவு உணவுடன் சேர்த்து மது குடித்துள்ளனர். சிவா பைக்கை ஓட்ட, எர்ரி சுவாமி பின்னால் அமர்ந்திருந்துள்ளார். சிவாவின் பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எர்ரி சுவாமி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்தபோது இருவரும் போதையில் இருந்ததை எர்ரி சுவாமி ஒப்புக்கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+