க்ரீன் சிக்னல் கொடுத்த தேர்தல் ஆணையம்.. தெலுங்கானாவில் கேசிஆருக்கு கிடைத்த பூஸ்ட்.. பின்னணி இதுதான்
ஐதராபாத்: தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் ரைத்து பந்து திட்டத்தின் கீழ் நிதியை அளிக்க தெலுங்கானா அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தலுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு இது மிகப்பெரும் பூஸ்ட் ஆக அமையும் எனக் கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவை பொறுத்தவரை அந்த மாநிலம் உதயமானது முதல் தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவ் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.

இந்த முறை ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி உள்ளது. அதேபோல், கோதாவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் உள்ளன. மும்முனை போட்டி நிலவினாலும் பி.ஆர்.எஸ்- காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. இதனால், அங்கு இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
60 லட்சம் விவசாயிகள் பயன்: தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணையாக அளிக்கும் ரைத்துபந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு முதலீட்டு நிதியாக ஒரு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த நிதி வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 60 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.
இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய இந்த தொகையை செலுத்த தேர்தல் ஆணையத்திடம் சந்திரசேகர் ராவ் அனுமதி கோரியிருந்தார். ஆனால், தேர்தல் நேரத்தில் இந்த தொகையை அளித்தால் அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் அனுமதி: விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை கூட செயல்படுத்த காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுவதாக பி.ஆர்.எஸ் கட்சி இதை வைத்து பிரசாரத்தில் விமர்சித்து வந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் ரைத்து நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க தேர்தல் ஆனையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விரைவில் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், விவசாயிகளுக்கு நிதிஉதவி அளிக்க அனுமதி கிடைத்து இருப்பது ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு பெரும் பூஸ்ட் ஆக அமைந்துள்ளது. தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications