செம்பு பாத்திரத்தில் சுற்றிய "வெள்ளை துணி".. பிரபல ஓட்டலுக்குள் யார் பாருங்க. இப்படி கூடவா? கடவுளே
ஹைதராபாத்: பிரபல ஓட்டலுக்குள் சாப்பிட சென்ற சாமியாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. யார் இவர்கள்? என்ன நடந்தது? என்பது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் பர்கி மண்டலத்தில் உள்ளது நாஸ்கல் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் ஸ்ரீதர் என்பவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பகுதியிலேயே மிகவும் பிரபலமான ஃபாஸ்ட் ஃபுட் இதுவாகும். இதனால் எந்நேரமும் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

மதிய உணவு: இந்நிலையில், இந்த ஓட்டலுக்கு 3 சாமியார்கள் சாப்பிட வந்தனர்.. இவர்கள் போலீரோ வாகனத்தில் வந்திறங்கியிருக்கிறார்கள்.. இவர்கள் செல்லும்வழியில் இந்த ஓட்டல் இருந்ததால், அனைவருமே இங்கு மதிய உணவு சாப்பிட வந்தனர்..
சாமியார்கள் அனைவரும் வயிறு நிறைய சாப்பிட்டு முடித்து, கைகளை கழுவிக் கொண்டனர்.. பிறகு சாப்பிட்டதற்கு பணம் தராமலேயே, நேராக வெளியே செல்ல முயன்றனர்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஓனர் ஸ்ரீதர், சாமியார்களை தடுத்து நிறுத்தி, சாப்பிட்டதற்கு பணம் கேட்டார்..
சாமியார்கள்: உடனே அந்த சாமியார்கள், "நீ ஏதோ பிரச்சனையில் இருக்கிறாய்.. உனக்கு அமைதி பூஜை தேவைப்படுகிறது.. இப்போதே அமைதி பூஜையை செய்கிறோம்.. இந்த சிறப்பு பூஜை செய்து, லாபத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம்.. ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டு வா" என்றார்கள்.
உடனே ஸ்ரீதரும், செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி தந்தார். அந்த பாத்திரத்திற்குள், ஸ்ரீதர் அணிந்திருந்த தங்க மோதிரத்தை போட சொன்னார்கள்.. ஸ்ரீதரும் தங்க மோதிரத்தை கழட்டி போட்டார்.. தூய்மையான ஒரு வெள்ளைத் துணியை கொண்டு வரும்படி சொன்னார்கள்.. அதன்படியே வெள்ளை துணியை தந்தார் ஸ்ரீதர்.
வெள்ளைத்துணி: அந்த வெள்ளை துணியால், செம்பு பாத்திரத்தை இறுக்கி கட்டினார்கள் சாமியார்கள்.. இந்த துணியை இன்று முழுவதும் திறக்காமல், நாளை காலையில் திறக்க வேண்டும்.. அதற்கு முன்பு திறக்கவே கூடாது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்..
இதனால், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஸ்ரீதர், உடனே அந்த பாத்திரத்தில் கட்டப்பட்டிருந்த வெள்ளையை துணியை திறந்து பார்த்தார்.. அதில் மோதிரத்திற்கு பதில், வெறும் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு விரைந்து சென்று அந்த போலி சாமியார்களை பிடிக்க முயன்றார். ஆனால், அந்த சாமியார்களோ, ஸ்ரீதர் விரட்டி வருவதை பார்த்ததுமே, அங்கிருந்து ஓட முயன்றனர். எனினும் அந்த பகுதியிலுள்ள கிராம மக்களுடன் விரட்டி சென்று, 3 சாமியார்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணை: பிறகு கைதானவர்களிடம் விசாரணை நடந்தது.. அப்போதுதான் அவர்கள் போலி சாமியார் என்பதும், இவர்கள் அனைவருமே ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இறுதியில், 3 சாமியார்கள் மற்றும் அவர்களுடன் வந்த ஒரு டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் வந்த வாகனத்தில், பூஜை சாமான்கள் நிரம்பி கிடந்தன.. இவர்கள் இதுபோல் எத்தனை பேரை ஏமாற்றியிருக்கிறார்கள்? ராஜஸ்தானிலிருந்து இங்கே எதற்காக வந்தார்கள்? என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற போலி சாமியார்களின் வார்த்தைகளை கேட்டு ஏமாற வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இப்போது ஸ்ரீதருக்கு அவரது மோதிரம் கிடைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications