ஏய் ஏய்.. "விடமாட்டேன்".. திடீர்னு மேடையில், புடவையை செருகி.. முதல்வரின் "குத்துச்சண்டை".. அடடே ரோஜா

நடிகை ரோஜாவின் குத்துச்சண்டை வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை ரோஜாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலருக்கும் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது.. அத்துடன் அமைச்சர் ரோஜாவுக்கான வாழ்த்துக்களும் மக்களிடமிருந்து குவிந்து வருகிறது.. என்ன காரணம்?
தனக்கான சினிமா வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைந்த நிலையில், திடீரென அரசியலில் தந்து தனக்கான முக்கியத்துவத்தை தக்க வைத்து கொண்டவர் நடிகை ரோஜா.

ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்ற மிக முக்கியன பிரமுகர் ரோஜா ஆவார்.. ஆரம்பத்தில் தன்மீதான விமர்சனங்களை எல்லாம், தன் நகரி தொகுதி மக்களிடம் காட்டிய செயல்பாடுகளாலேயே நொறுக்கி காட்டியவர்..

 ஜெ ஜெ ஜெயலலிதா

ஜெ ஜெ ஜெயலலிதா

அண்ணன் ஜெகன்மோகன் மீதான விசுவாசமும், எதிர்க்கட்சிகளை "டீல்" செய்யக்கூடிய துணிச்சலும்தான், ரோஜாவை எம்எல்ஏவில் இருந்து அமைச்சராக உயர்த்தியது என்றே சொல்லலாம். நகரி தொகுதியில் ரோஜா மேற்கொண்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் ஆந்திர மாநிலத்தையே திகைக்கவைத்தன.. ரோஜா மேற்கொண்ட செயல்திட்டங்களும், அறிவிப்புகளும் மக்களிடம் விரைந்து சென்றடைந்தன.. இந்த அதிரடிகளுக்கு தனக்கு பெரிதும் காரணமாக இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் ரோஜா சொல்வதை மறுக்க முடியாது.

 கலாரசனை

கலாரசனை

சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக தற்போது உள்ளார் ரோஜா.. பொதுவாக இந்த துறை, அந்த அளவுக்கு பிரபலமானது கிடையாது.. அதனால், சுற்றுலா துறை அமைச்சர்கள் பற்றின செயல்பாடும், செய்திகளும் மக்களை பெரும்பாலும் சென்றடைவதும் இல்லை.. ஆனால், ரோஜா இந்த பொறுப்புக்கு வந்தபிறகு, சுற்றுலா துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.. இயல்பாகவே கலாரசனையும், கலகலப்பு குணமும் கொண்ட ரோஜாவுக்கு இந்த துறை மிக பொருத்தமாகவே அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.. சுற்றுலா மற்றும் கலைகளை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும், அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ரோஜா..

 புடவையை செருகி

புடவையை செருகி

எத்தனையோ மாணவர்களுடன் இணைந்து கபடி ஆடிய ரோஜாவை பார்த்து, பள்ளிகள் வியந்து போயின.. அதேபோல, கடந்தமாதம்கூட, திருப்பதியில் கலாச்சாரத்தை மேம்படுத்த நடைபெற்ற கலைநிகழ்ச்சி ஒன்று நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. மாணவிகள் மேடையில் நடனமாடி கொண்டிருக்கும்போது, கைதட்டி உற்சாகமாக ரசித்துக் கொண்டிருந்தார் ரோஜா.. ஆனால், டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மேடையில், திடீரென ரோஜாவையும் மேடைக்கு வருமாறு கூப்பிட்டுவிட்டனர்..

 கேஷூவல்

கேஷூவல்

மாணவிகள் ஆசையாக கூப்பிட்டதுமே, துளியும் பந்தா இல்லாமல், டக்கென மேடையேறிய ரோஜா, புடவையை இழுத்து செருகி, அந்த மாணவிகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி அசத்தினார்... அந்த நிகழ்ச்சியில் ரோஜா பேசும்போது, குழந்தையாக இருந்தபோது அமைதியாக இருந்தேன்... அப்போது இது போன்ற சான்ஸ்கள் எனக்கு கிடைப்பதில்லை.. ஆனால், இப்போ சான்ஸ் கிடைச்சாச்சு.. அதனால், அந்த சான்ஸை மிஸ் பண்ண முடியல.. அதான் பயன்படுத்தி கொண்டேன்" என்று கேஷூலாக பேசியதை கேட்டு மாணவிகள் பூரித்து நின்றனர்.

 குத்துச்சண்டை

குத்துச்சண்டை

இதோ இப்போது மீண்டும் அசரடித்துள்ளார் ரோஜா.. விசாகப்பட்டினத்தில் முதல்வரின் தேசிய குத்துச்சணடை போட்டி நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோஜா போட்டியை துவக்கி வைத்தார்.. அப்போது கைகளில் கிளவுஸை அணிந்து கொண்டு, அங்கிருந்தவர்களுடன் குத்துச்சண்டை போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ரோஜா களத்தில் இறங்கியதுமே அவரை பார்த்து, மற்ற பெண்களும், ஆர்வமுடன், கைகளில் கிளவுஸை மாட்டிக் கொண்டு விளையாட வந்துவிட்டனர்.. இதை பார்த்து அங்கிருந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்..

 கிளவுஸ் சகஜம்

கிளவுஸ் சகஜம்

அதாவது எந்த நிகழ்ச்சிக்கு ரோஜா செல்கிறாரோ, அந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய வகையிலேயே செயல்பட்டும் வருவதுதான், ரோஜாவின் ஆகச்சிறந்த பிளஸ் பாயிண்ட்டாக இருந்து வருகிறது.. அது கபடி என்றாலும் சரி, டான்ஸ் ஆக இருந்தாலும் சரி, குத்துச்சண்டையாக இருந்தாலும் சரி.. அமைச்சர்கள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கண்டிப்பு, கறார்களை எல்லாம் தூக்கி தூரயெறிந்துவிட்டு, மக்களுடன் சகஜமாகவும், நெருங்கியும் உறவாடி வருகிறார் ரோஜா..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+