வெறும் 25 கி.மீ தூரம்தான்.. நிலவை மேலும் நெருங்கிய விக்ரம் லேண்டர்! இனி தரையிறங்குவது மட்டுமே பாக்கி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட நிலையில், இறுதி கட்டமாக அதன் தூரம் நிலவுக்கு நெருக்கமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக நிலவில் லேண்டர் தரையிறங்க இருக்கிறது.

நிலவில் இருக்கும் வளங்களையும், நிலவின் பகுதிகளையும் யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கும் நீர்தான். அமெரிக்காவின் நாசாவே இதை கண்டுபிடிக்க தவறிய நிலையில் இஸ்ரோவின் சந்திரயான்-1 விண்கலம் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்து சொன்னது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

Finally, ISRO reduced the distance of the Vikram lander closer to the moon

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது வரும் 23ம் தேதி நிலவில் தரை இறங்க இருக்கிறது.

எனவே படிப்படியாக அதன் தூரம் குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் 113x157 கி.மீ என்கிற அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இன்று அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டர் மேலும் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி தற்போது லேண்டர் நிலவுக்கு குறைந்தபட்சமாக 25 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 134 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது.

சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்த பின்னர் அதன் தூரம் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுவது மட்டுமே பாக்கி இருக்கிறது. வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக கடந்த 17ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டபோது நிலவை ஃபோட்டோ எடுத்திருக்கிறது. அந்த படங்கள் இஸ்ரோவால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி நிலவில் விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கினால் இந்தியா விண்வெளி துறையில் புதிய சாதனை படைத்துவிடும்.

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை பத்திரமாக தரையிறக்கியுள்ளது. அப்படி இருக்கையில், இந்தியா இந்த மிஷனில் வெற்றி பெற்றால் உலக அளவில் அது பெரும் சாதனையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+