தங்கச்சி.. உயிர் பிரியும்போது பெண் செய்ததை பாருங்க.. ஒரு கொடியில் இரு மலர்கள்.. விக்கித்த தெலுங்கானா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நாடெங்கும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை சிறப்பாக கொண்டாடி வந்த நேரத்தில், தெலுங்கானாவில் ஒரு சோக சம்பவம் நடந்து, அங்குள்ளவர்களை நிலைகுலைய வைத்துவிட்டது.. என்ன நடந்தது? யாரிந்த பெண்?

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரக்ஷா பந்தன். நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன், மிகவும் விரும்பப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும்.

Telangana sister rakhi raksha bandhan

இது அண்ணன் - தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அண்ணன் - தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

ராக்கி: இதையொட்டி, சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்து, அவர்களின் மணிக்கட்டில் ராக்கி என்ற புனித கயிறு கட்டுவார்கள்.. பதிலுக்கு சகோதரர்களும், தங்கள் அன்பை தெரிவிக்கும் விதமாக சகோதரிகளுக்கு பரிசளித்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

வடமாநிலங்களில் மட்டுமே மிகவும் பிரபலமான பண்டிகையாக ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இப்போது தமிழகத்தின் கிராமங்கள் வரை இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்தவகையில், நேற்றைய தினம், ரக்‌ஷா பந்தன் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாசம் - நெகிழ்ச்சி: பாசமுள்ள தங்கைகள், தங்கள் அண்ணனுக்கு, ராக்கி கயிறு கட்டி அன்பையும் பாசத்தையும் பொழிந்து சிறப்பித்து கொண்டிருந்தபோது, தெலுங்கானாவில் ஒரு துயர சம்பவம் நடந்து ஒட்டுமொத்த பேருக்கும் அதிர்ச்சியை தந்துவிடடது.

கோடாட் நகரத்தில் டிப்ளமோ படித்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.. இந்த பெண்ணை, அந்த பகுதி இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி லவ் டார்ச்சர் தந்து வந்துள்ளார்.. இந்த காதலை ஏற்க முடியாது என்றும், தன் பின்னால் வீணாக சுற்ற வேண்டாம் என்றும் இளம்பெண் எவ்வளவோ முறை கண்டித்தும்கூட, அந்த இளைஞரின் அட்டகாசம் அடங்கவில்லை.

டார்ச்சர்: எனவே, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, அந்த பெண்ணை விடாமல் துரத்தி துரத்தி டார்ச்சர் தந்தும், மிரட்டல் விடுத்தும் வந்திருக்கிறார்.. ஒருகட்டத்தில் இவர்களின் துன்புறுத்தல் தாங்க முடியாமல், அந்த பெண் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. எனினும், இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.. தீவிரமான சிகிச்சை தந்தும், அவரது உடல்நிலை மோசமடைந்துகொண்டே சென்றது.

இதனால், தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதை சமீப நாட்களாகவே அந்த பெண் உணர்ந்திருந்தார். இந்த நிலையில்தான் நேற்று ரக்‌ஷா பந்தன் நாடெங்கும் கொண்டாடப்பட்டது..

இதையடுத்து, இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தன்னுடைய சகோதரனின் கையில் ராக்கி கட்டிவிட்டார்... அடுத்த சில நொடியில் அப்பெண்ணின் உயிரும் பிரிந்தது.. அந்த பெண்ணுக்கு இறுதிச்சடங்கு நடந்தபோது, சகோதரர் உட்பட ஒட்டுமொத்த குடும்பமே கண்ணீர்விட்டு கதறியது, காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.

துயரம் - பரிதாபம்: இதனிடையே, அந்த இளம் பெண்ணை, தொடர்ந்து லவ் டார்ச்சர் தந்து, மரணம் வரை கொண்டு சென்றவர்களை, நரசிம்ஹுல்பேட்டை போலீஸார் நேற்றைய தினமே அதிரடியாக கைது செய்துள்ளனர்.. அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கும் போலீஸார், மேற்கொண்டு விசாரணை நடத்திவருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஒருதவறும் செய்யாமல், தற்கொலையும் செய்துகொண்டு, தன் சகோதரனுக்கு பாசக்கயிற்றை கட்டிவிட்டு, உயிரையும் விட்ட இந்த சகோதரியின் மரணம், தெலுங்கானாவையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+