ஆசை ஆசையா.. கழுத்தில் "அதை" போட்டு.. கிட்ட கிட்ட கெஞ்சி கொஞ்சிய இளைஞர்.. கடைசியில் என்னாச்சு பாருங்க
நாகப்பாம்பை கழுத்தில் சுற்றியதுடன் அதை ஆசையுடன் கொஞ்சியிருக்கிறார் இளைஞர் ஒருவர்
ஹைதராபாத்: செல்பி மோகத்தால் ஜூஸ் கடை வைத்திருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் செல்பி மோகம் அதிகரித்துவிட்டது.. எந்த அளவுக்கு மோகம் இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் இளைஞர்கள் உணருவதில்லை.. வித்தியாசமாக செல்பி எடுப்பதாக சொல்லி, பெரும்பாலும் அவை துயரங்களிலேயே முடிந்தும் விடுகின்றன..
அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பெரும் கலக்கத்தை இணையத்தில் ஏற்படுத்தி விட்டு செல்கின்றன.. செல்பி மோகத்தால், பல உயிரிழப்புகள் ஏற்பட்டும்கூட, இளைஞர்களிடம் செல்பி ஆசை நீங்காமல் உள்ளது.

பாம்பாட்டி
இதோ இன்னொரு துயரம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.. நெல்லூர் மாவட்டம், தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி.. 28 வயதாகிறது.. இவர் கந்தகுரு பகுதியில் ஜூஸ் கடை ஒன்றை நடத்தி வருபவர். நேற்று முன்தினம் தன்னுடைய கடையை அடைத்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார் மணிகண்டா.. அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே, பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தார். அது கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு என்பதை அறியாத மணிகண்டா, அந்த பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்..

கெஞ்சிய மணிகண்டன்
பாம்பாட்டியிடம் சென்று, பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்.. இதைக் கேட்டு அதிர்ந்து போன பாம்பாட்டி, அதற்கு மறுப்பு தெரிவித்தார்... ஆனாலும், பாம்பாட்டியை வற்புறுத்த ஆரம்பித்தார் மணிகண்டா.. "ஒரே ஒரு செல்ஃபி மட்டும் எடுத்துக் கொள்கிறேன்" என்று கெஞ்சினார்.. தொடர்ந்து பாம்பாட்டி மறுக்கவும், பணம் தருவதாக சொல்லவும், உடனே ஓகே சொல்லி உள்ளார்.. இதனால் குஷியாகிவிட்ட மணிகண்டன், அந்த நாகப்பாம்பை தன்னுடைய கழுத்தில் சுற்றி விட வேண்டும் என்றும் பாம்பாட்டியிடம் ஆசையாக கேட்டுள்ளார்..

கழுத்தில் ஏத்துங்க
பணம் கிடைப்பதால், பாம்பாட்டி அதற்கும் சம்மதம் சொல்லியதுடன், பாம்பை எடுத்து, மணிகண்டாவின் கழுத்தில் சுற்றிவிட்டார்.
கழுத்தில் பாம்பு சுற்றப்பட்டதுமே மணிகண்டா, மகிழ்ச்சியில் துள்ளினார்.. பாம்புடன் செல்பி எடுத்தார்.. அத்துடன் விடவில்லை.. அந்த பாம்பை கொஞ்சினார்... இறுதியில், கழுத்தில் இருந்து பாம்பை எடுத்தபோது, அந்த நாகப்பாம்பு திடீரென மணிகண்டாவை கடித்து விட்டது... இதையடுத்து பாம்பை கழுத்தில் இருந்து வீசி எறிந்துவிட்டு வலியால் அலறி துடித்தார் மணிகண்டா.. நாகப்பாம்பு என்பதால், அவரால் வலியை பொறுக்க முடியவில்லை.

பதறிய பாம்பாட்டி
அங்கிருந்தவர்கள் இதை பார்த்து பதறிப்போய், அவரை அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு, அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.. அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டா ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள். இதுகுறித்து உடனடியாக கந்துகோல் போலீசாருக்கு தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து, வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications