ஆசையாக தேர்வெழுத சென்ற முஸ்லிம் மாணவிகள்.. காத்திருந்த அதிர்ச்சி! ஐதராபாத்திலும் ஹிஜாப் தடையா?

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: தனியார் கல்லூரியில் தேர்வெழுத சென்ற இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்துக்காக தேர்வரைக்குள் அனுமதிக்கப்படாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமைந்து உள்ள கே.வி.ரங்காரெட்டி மகளிர் கல்லூரியில் உருது மீடியம் மாணவர்களுக்கான துணை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்று இருக்கிறார்கள்.

https://tamil.oneindia.com/news/chennai/do-you-know-how-much-money-actor-vijay-will-give-to-the-students-516984.html

அப்போது கல்லூரியில் இருந்த ஆசிரியர், ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வரைக்கு உள்ளே நுழையக்கூடாது என்று அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவிகளோ ஹிஜாபை அகற்ற முடியாது என்றும், இதற்கு முன் தேர்வு எழுத செல்லும்போது ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்பதை ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளார்கள்.

ஆனால், ஆசிரியர்களோ ஹிஜாபை அகற்றினால் மட்டுமே அனுமதிப்போம் என விடாபிடியாக இருந்து உள்ளனர். இதன் காரணமாக மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில மாணவிகள் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக ஹிஜாபை அகற்றிவிட்டு உள்ளே சென்றனர். சில மாணவிகள் தேர்வெழுத செல்லாமல் ஹிஜாபுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இது தொடர்பாக பேசிய மாணவி ஒருவர், "இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன் இந்த கல்லூரியில் நிகழ்ந்ததே இல்லை. இங்கு சாதாரணமாக ஹிஜாப் அணிந்து நாங்கள் வருவோம். திடீரென தடை விதித்து உள்ளார்கள். ஹிஜாப் அணிந்திருக்கும் மாணவிகளையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்ட வெளியான தகவலை கல்லூரி நிர்வாகம் மறுத்து உள்ளது. "இதுபோன்ற கட்டுப்பாடுகளை நாங்கள் விதிக்கவில்லை. ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வெழுத எந்த தடையும் இல்லை." என்று தெரிவித்து இருந்தது.

இதற்கிடையே ஹிஜாப் அணிந்ததற்காக தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட மாணவிகளைன் பெற்றோர், மாநில உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலியிடம் இது பற்றி புகாரளித்தனர். இதற்கு பதிலளித்த அவர், இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்படும். ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை தேர்வு எழுத அனுமதி மறுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சில தலைமை ஆசிரியர்களும் கல்வி நிறுவன முதல்வர்களும் இவ்வாறு செய்யலாம். எங்கள் கொள்கை என்பது மதசார்பற்றது. மக்கள் தாங்கள் விரும்பிய எந்த ஆடைகளை வேண்டுமானாலும் அணியலாம். பெண்கள் குறைவான ஆடைகளை அணிவதால் பிரச்சனைதான். நிறைய ஆடைகளை அணிந்தால் நிம்மதியாக இருக்கலாம். புர்கா அணியக்கூடாது என்று எந்த இடத்திலும் எழுதப்படவே இல்லை." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+