ஆணவக்கொலை... மதம்விட்டு மதம் திருமணம் செய்த தலித் வாலிபர் பலி... தெலுங்கானாவில் பயங்கரம்
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே மதம்விட்டு மதம் காதலித்து திருமணம் செய்த தலித் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்தி ஆணவக்கொலை செய்யயப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. திருமணம் செய்த 4 மாதத்துக்குள் அவர் தீர்த்து கட்டப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் மார்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 25). தலித் சமுதாயத்தை சேர்ந்த கார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார்.
இவரும் பக்கத்து கிராமமான கானாப்பூரை சேர்ந்தவர் அஷ்ரீன் சுல்தானா. இவர்கள் 2 பேரும் பள்ளி காலத்தில் இருந்து காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

எதிர்ப்பை மீறி திருமணம்
இதற்கு இருவரின் குடும்பத்தினரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து ஓல்டு சிட்டியில் உள்ள ஆர்ய சமாஜ் மந்தீரில் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அதன்பிறகு சரூர் நகரில் உள்ள அணில் குமார் நகரில் தனியாக வாழ தொடங்கினர். இதற்கிடையே நாகராஜூவின் குடும்பத்தினர் கொஞ்சம் இறங்கி வந்துள்ளனர்.

கத்தியால் குத்திக்கொலை
இந்நிலையில் சரூர் நகரில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று இரவு 9 மணிக்கு நாகராஜூ தனது மனைவியுடன் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் நாகராஜூ சரிந்து கீழே விழுந்து துடிதுடித்து இறந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஆணவக்கொலை குற்றச்சாட்டு-போராட்டம்
இதையடுத்து நாகராஜூவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் போராட்டத்தில் இணைந்தனர். நாகராஜூவின் கொலைக்கு பின்னணியில் அவரது மனைவியின் குடும்பத்தினர் உள்ளதாகவும், மதம் விட்டு மதம் திருமணம் செய்ததால் நாகராஜூவை அவர்கள் ஆணவக்கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டினர். மேலும் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் தீவிர விசாரணை
இதுபற்றி உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீதர் ரெட்டி கூறுகையில், ‛நாகராஜூ - அஸ்ரின் சுல்தானா திருமணத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்னளர். எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்தனர். இந்நிலையி்ல நாகராஜூ குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்'' என்றார். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக அஸ்ரின் சுல்தானாவின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications