சந்தேகப்பட்ட கணவர்! கொதிக்கும் எண்ணெய்யில் கை விட்டு தனது விசுவாசத்தை நிரூபிக்க ரெடியான பெண்! பகீர்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தனது கணவருக்கு விசுவாசமாக இருப்பதை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்யில் கையை விடத் தயாராக இருந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மனைவி மீது கணவர் சந்தேகம் கொண்டுள்ளார். மனைவி தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாக அந்த நபர் சந்தேகமடைந்துள்ளார்.

இதனால் மனைவி தனக்கு விசுவாசமாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் இதற்காகக் கொதிக்கும் எண்ணெய்யில் கைகளை விட வேண்டும் என்றும் கூடியிருக்கிறார். இதற்கு அந்த பெண் தயாராக இருந்த நிலையில், அப்போது சரியான நேரத்தில் அரசு அதிகாரி தலையிட்டதால் மோசமான சம்பவம் தவிர்க்கப்பட்டது.
ஷாக் சம்பவம்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பூதலாப்பட்டு அடுத்துள்ள தத்தித்தோப்பு கிராமத்தில் பழங்குடியினர் சமூகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரி கூறுகையில், "காலை 10:30 மணியளவில், அந்த பெண் பெண் கொதிக்கும் எண்ணெய்யில் கையை விடத் தயாராக இருந்தார். சரியாக நான் அப்போது அங்கே சென்றதால்.. அவரை காப்பாற்ற முடிந்தது" என்றார்..
அந்த ஊரின் சடங்குப்படி மனைவி மீது ஆண்கள் சந்தேகப்பட்டால் ஐந்து லிட்டர் கொதிக்கும் எண்ணெய்யில் கையைவிட வேண்டும். இதை அவர்கள் 'விசுவாச சோதனை' என்றே குறிப்பிடுகிறார்கள். அதன்படி இந்த ஆந்திர கிராமத்தில் இந்த சோதனைக்கு அந்த பெண் தயாரானார். இதற்காகப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புதிய மண் பானையில் எண்ணெய் ஊற்றப்பட்டு, அது கொதிக்கும் நிலைக்குச் சூடாக்கப்பட்டது. இதைக் காண அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்களும் ஒன்று கூடியிருந்தனர்.
"கலி காலம்!" கணவரை ஐந்து லட்சத்திற்கு விற்ற மனைவி! கர்நாடகாவில் ஷாக்! மிரண்டுபோன நெட்டிசன்கள்
என்ன நடந்தது: 50 வயதான அந்த பெண் மீது அவரது கணவருக்கு நீண்ட காலமாகச் சந்தேகம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகம் அதிகரிக்கவே இது தொடர்பாக அவர் ஊரில் உள்ள பெரியவர்களிடம் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர்கள் இந்த சோதனைக்கு ரெடி செய்துள்ளனர். மனைவி மீது கொண்ட சந்தேகம் காரணமாக அந்த பெண்ணின் கணவர் பலமுறை அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள யெருகுல பழங்குடியினரின் வழக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் வழக்கத்தின்படி, மனைவி மீது கணவருக்குச் சந்தேகம் ஏற்பட்டால் பெண், அனைவர் முன்னிலையில் கொதிக்கும் எண்ணெய்யில் கைகளை விட வேண்டும். அந்தப் பெண்ணின் கைகள் எரிகிறதா இல்லையா என்பதை வைத்து அவரது நேர்மை முடிவு செய்யப்படுமாம்.
கொதிக்கும் எண்ணெய் டெஸ்ட்: கொதிக்கும் எண்ணெய்யில் கை விடும் போது அவருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் அவர் கணவனுக்கு விசுவாசமாக இருக்கிறார் என அர்த்தம். அதேநேரம் கையில் காயம் ஏற்பட்டால் அவர் 'விசுவாசம் இல்லாதவர்' என்று அவர்கள் கருதுவார்களாம்.
50 வயதான அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர். கணவருக்கு தன் மீது எழுந்த சந்தேகத்தைப் போக்க அவர் இந்த சோதனையைச் செய்யவும் தயாராக இருந்துள்ளார். அப்போது உள்ளூர் மண்டல அதிகாரிக்கு இது தொடர்பான தகவல் கிடைத்ததால் சரியான நேரத்தில் தலையிட்டு இந்த வழக்கத்தை நிறுத்தியுள்ளார்.
கணவர் தொடர்ந்து தன்னை குற்றஞ்சாட்டித் தாக்கி வந்ததாகவும் இதனால் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடிவு செய்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக யார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. அதேநேரம் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த காவலர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.












Click it and Unblock the Notifications