Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிம்மில் ஒர்க்அவுட்.. சுருண்டு விழுந்து போலீஸ்காரர் சாவு.. மாரடைப்பு வந்தால் உடனே என்ன செய்யணும்?

ஹைதராபாத்தில் ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு போலீஸ்காரர் உயிரிழந்தார். உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வந்தால் உடனே செய்ய வேண்டியது குறித்து மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சியின் போது 24 வயது காவலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் மாரடைப்பு எதனால் வருகிறது. அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர்கள் விளக்கி உள்ளனர்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது. நடிகர் புனித் ராஜ்குமார், ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வரும் போது தான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் வேறு சில சம்பவங்களும், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் கடந்த சில வருடங்களில் நடந்துள்ளது,

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள போவன்பல்லியில் வசிப்பவர் விஷால் வயது 24. இவர் ஆசிப் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தான் வசிக்கும் பகுதியில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.

 ஜிம் வீடியோ

ஜிம் வீடியோ

அப்படித்தான் வியாழக்கிழமை இரவு 8மணி அளவில் காவலர் விஷால் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் விஷால் தீவிரமாக புஷ் அப் உள்பட உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். திடீரென அருகில் இருந்த கம்பியை பிடித்து சோர்வாக நிற்கும் விஷால், அப்படியே மெதுவாக சரிந்து கீழே விழுகிறார். அவரை சுற்றி உள்ளவர்கள் ஓடி வந்து பார்க்கிறார்கள்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

என்ன நடந்தது என்பதை சுற்றி உள்ளவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அவர் இருமுகிறார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு உதவி செய்கிறார்கள். அப்போது ஒருவர் அவரை உயிர்பெற வைக்க உடற் பயிற்சியாளரை அழைக்கிறார். அத்துடன் அவர்கள் விஷாலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளளது .

 மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

அவரது இறப்புக்கு 'திடீர் கார்டியாக் அரெஸ்ட்' ( SCA ) என மருத்துவர்கள் கூறுகின்றனர். முன்பு வயதானவர்களுக்குத்தான் இது போன்று திடீர் மாரடைப்பு ஏற்படும். ஆனால் சமீப காலங்களில், இளைய வயதினரிடம் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்தின் மின் அமைப்பை சீர்குலைப்பதன் மூலம் நோயாளியை திடீர் இதய மரணத்திற்கு ஆளாக்கும் அதே வேளையில், இதய வால்வுகளில் பிரச்னை, இதயச் செயலிழப்பு ஆகியற்றாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 எப்படி வருகிறது

எப்படி வருகிறது

மாரடைப்பு ஏன் வருகிறது? "இதய வால்வுகளில் பிரச்னை, இதயச் செயலிழப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த திடீர் மாரடைப்பு உண்டாகிறது. இதுதவிர, அதிகமாக உடற்பயிற்சி (வார்ம்அப் எடுத்துக் கொள்ளாமல்) செய்பவர்களுக்கும், திடீரென கடுமையான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் பொழுதுபோக்குக்காக விளையாடும் மாணவர்களுக்குப் படபடப்பு, மூச்சுத்திணறல், மயக்கம், நெஞ்சுவலி போன்ற பாதிப்புகள் இருந்தால் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. அதேபோல, பெற்றோர் அல்லது தங்களது பரம்பரையில் யாருக்காவது சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போயிருந்தால் அவர்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 வாழைப்பழம்

வாழைப்பழம்

அரித்மியாஸ்' என்று சொல்லப்படும் இதயப் படபடப்பு காரணமாகப் பலருக்கு மூளைக்குச் செல்லவேண்டிய ரத்தம் சரியாகச் செல்லாமல் நினைவிழப்பு ஏற்பட்டு, அதிலிருந்து உடனடியாக மீள இயலாமல் மரணம் ஏற்படும் நிலை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். வெளிநாடுகளில் இதுபோன்ற சூழலை கையாள்வதற்காக பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஏ.ஈ.டி' (Automated External Defibrillators) எனப்படும் முதலுதவி கருவி வைக்கப்பட்டிருக்கும் .இதன் மூலம் நின்றுபோன இதயத் துடிப்பை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். நம்நாட்டிலும் இதுபோன்ற வசதிகளைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் மேம்படுத்தவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தொடர்ச்சியாகப் பயிற்சிகளில் ஈடுபடும்போதும், விளையாடும்போதும் சிலருக்கு ரத்தத்தில் உள்ள பொட்டாசியம் குறைந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதுபோன்ற நேரங்களில் வாழைப்பழம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், உணவு வகைகளைச் சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+