Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுமை.. ட்ரஷர் ஹண்ட் விளையாட போய்.. கிணற்றில் விழுந்து உயிரிழந்த ஐடி ஊழியர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாகச விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் 'ட்ரஷர் ஹண்ட்' என்ற புதையலை தேடிச் செல்லும் சாகச விளையாட்டில் ஈடுபட்ட ஐடி பொறியாளர் ஒருவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாகச விளையாட்டு எனத் தெரிந்தும் எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யாமல் இருந்த விளையாட்டு மையத்தின் உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இளைஞர்கள் இதுபோன்ற மையங்களுக்கு வந்து சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மன அழுத்தத்துக்கு ஆளாகும் இளைஞர்கள்..

மன அழுத்தத்துக்கு ஆளாகும் இளைஞர்கள்..

அறிவியல் வளர்ச்சி ஒருபுறம் வளர வளர, மனிதர்களின் வாழ்க்கை முறை இயந்திரமயமாகி விட்டது. நாள் முழுவதும் லேப்டாப், கம்ப்யூட்டர் முன்பு உட்கார்வது தான் இன்றைய இளைஞர்கள் பலரின் வேலையாக உள்ளது. வேலை முடிந்தும் கூட, செல்போனே கதி என்று அவர்கள் உட்காந்து விடுகின்றனர். இவ்வாறு உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால் மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பல நோய்களுக்கு இளைஞர்கள் ஆளாகி வருகின்றனர்.

பணம் பறிக்கும் அட்வென்ச்சர் கிளப்புகள்

பணம் பறிக்கும் அட்வென்ச்சர் கிளப்புகள்

இதனிடையே, மன அழுத்தத்தை போக்குவதாக கூறி பல அட்வென்ச்சர் க்ளப்புகளை (சாகச மையம்) சிலர் திறந்து வருகின்றனர். இதில் பல சாகச விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. கயிறு கட்டி உயரமான இடத்தில் இருந்து குதிப்பது; மலையேற்றம் போன்றவை இதில் அடங்கும். ஆனால் பெரும்பாலான இந்த மையங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிப்பதில்லை. பணத்தை மட்டும் பறித்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சமீபகாலமாக இதுபோன்ற மையங்களில் விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. இதுபோன்ற விபரீத சம்பவம்தான் ஹைதராபாத்தில் தற்போது நடந்திருக்கிறது.

ஐடி பொறியாளர்

ஐடி பொறியாளர்

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சாய் குமார் (33). ஐடி நிறுவனத்தில் பொறியாளராக இருக்கும் இவர், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் இதுபோன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், நேற்று விகாராபாத் பகுதியில் உள்ள சாகச விளையாட்டு மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு இவர் 'ட்ரஷர் ஹண்ட்' எனும் புதையலை தேடிச் செல்லும் விளையாட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.

கிணற்றில் மூழ்கி பலி..

கிணற்றில் மூழ்கி பலி..

இந்த விளையாட்டு நடைபெறும் இடத்தில் உள்ள மலைகள், ஆறுகள் போன்ற பகுதிகளில் புதையல் எங்கே உள்ளது என்பது தொடர்பான க்ளூக்கள் துண்டுச் சீட்டு அல்லது வேறு ஏதேனும் பொருட்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். விளையாட்டில் ஈடுபடுவோர் அந்த துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு அது சொல்லும் வழியில் சென்றால், புதையலை எடுத்துவிடலாம். பெரும்பாலும் 1 லட்சம் ரொக்கம் அல்லது மோட்டார் சைக்கிள் ஆகியவையே இந்த புதையலாக இருக்கும். அதன்படி, சாய் குமார் இந்த க்ளூவை தேடி அங்குள்ள கிணற்றில் இறங்கினார். அப்போது திடீரென அவரது கால் வழுக்கி கிணற்றில் விழுந்தார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் சாய் குமார் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று சாய்குமாரின் உடலை கைப்பற்றினர். மேலும், எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் சாகச விளையாட்டு நடத்தியவர்கள் மீது போலீலார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+