ஹைதராபாத் காரில் சிறுமி பலாத்காரம்.. ஆணுறையை பயன்படுத்திய குற்றவாளிகள்?.. திடுக் தகவல்கள்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் ஆணுறைகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி அங்கு ஒரு மதுபான விடுதிக்கு சென்றிருந்தார். அப்போது அவரது தோழி பார்ட்டி முடிந்ததும் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
ஆனால் இந்த சிறுமி நீண்ட நேரம் கிளப்பில் இருந்துள்ளார். அப்போது ஒரு சில இளைஞர்களுடன் பழகியுள்ளார். அவர்கள் காரில் வருமாறு அழைத்து வீட்டில் விட்டுவிடுவதாக கூறினர்.

சிறுமி
இதை நம்பிய அந்த சிறுமி அவர்களுடன் அந்த சொகுசு காரில் ஏறினார். அப்போது ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் திடீரென காரை நிறுத்தினர். அப்போது அந்த சிறுமியை 5 பேரும் கூட்டு பலாத்காரம் செய்தனர். அதைத் தொடர்ந்து வீடு திரும்பிய அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

போலீஸில் புகார்
அவர்கள் உடனே போலீஸில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரில் 3 பேர் மைனர்கள் என்று தெரியவந்தது. மற்ற இருவர் சாதுதீன் மாலிக் மற்றும் உமர்கான் ஆகியோராவர். இவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். குறிப்பாக ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தோழைமை கட்சியான ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என தெரிகிறது.

சொகுசு கார்
சிறுமியை பலாத்காரம் செய்த சொகுசு கார், தெலுங்கானா மாநில அரசில் முக்கிய பங்கு வகிக்கும் டிஆர்எஸ் கட்சி தலைவர் ஒருவருக்கு சொந்தமானதாம். இந்த வழக்கில் சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

4 பேர் கைது
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேரும் கையில் ஆணுறைகளை வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆணுறையை பயன்படுத்திய குற்றவாளிகள்
அவர்கள் அந்த 17 வயசு சிறுமியை காரில் பலாத்காரம் செய்த போதும் கூட ஆணுறையை அவர்கள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இந்த ஆணுறைகளை பப்பிற்கு வரும்போதே அந்த 5 பேரும் வாங்கி வந்தனரா, இல்லை சிறுமியை பப்பில் இருந்து அழைத்து சென்ற போது செல்லும் வழியில் காரை நிறுத்தி வாங்கினரா என்பது குறித்தும் எந்த கடையில் வாங்கினர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications