பெங்களூர் எங்களுக்கு போட்டியில்லை.. ஹைதராபாத் உள்கட்டமைப்பு டாப்பாக உள்ளது- தெலுங்கானா அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பெங்களூர் நகருடன் போட்டி இல்லை என்றும், ஹைதராபாத் உள்கட்டமைப்பு பெங்களூரை விட சிறப்பாக உள்ளதாகவும் தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அமைச்சர் கே. டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பெங்களூரு ஸ்டார்ட்அப் உரிமையாளர்களை, ஹைதராபாத்திற்கு வறுமாறு தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே. டி. ராமராவ் அழைப்பு விடுத்தார். இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் பி.எஸ்.பொம்மை தெரிவித்த கருத்து அரசியல் சர்ச்சையாக மாறியது.

Hyderabad infrastructure much better than Bengaluru says, KTR

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. டி. ராமராவ், கடந்த 8 ஆண்டுகளாக தான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பதாக குறிப்பிட்டார். முதலீட்டாளரைச் சந்தித்தபோது, முதலீடு செய்வதற்காக வெளிநாடுகளைத் தவிர்த்து இந்தியாவைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​எங்கு செல்வது என்று சிந்திக்கத் தொடங்குகியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹைதராபாத்தின் நன்மைகளை பட்டியலிட்ட அமைச்சர், உலகளாவிய தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பங்கு ஹைதராபாத்தில் தயாரிக்கப்படுகிறது என்றும், இந்தியாவின் 40% மருந்துகள் ஹைதராபாத்தில் உள்ளன என்றும் கூறினார்.

உலகெங்கிலும் எந்த நாட்டிலும் எந்த மாநிலத்திலும் US FDA-அங்கீகரிக்கப்பட்ட மருந்தகத்தில் அதிக எண்ணிக்கையிலான உற்பத்தி வசதிகள் ஹைதராபாத்தில் உள்ளன. வடக்கு இந்தியா மற்றும் தெற்கு இந்தியா சந்திக்கும் நகரம் ஹைதராபாத் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிரி தொழில்நுட்பம், ஹைதராபாத் பிரியாணி, பரோட்டா என ஹைதராபாத் சிறப்புகளை அவர் பட்டியலிட்டார். பெங்களூரை விட தங்கள் உள்கட்டமைப்பு மிகவும் சிறந்ததாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விமானத்தில் அமேசான் பிரதிநிதிகளை சந்தித்த ஒரு சம்பவத்தை எடுத்துரைத்த அமைச்சர், கர்நாடகாவில் சில வரிப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம் என்று அவர்கள் கூறியதாகவும், இதனால் ஹைதராபாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தாதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரமே கூட்டம் நடைபெற்றதோடு, ஹைதராபாத்தில் மையம் நடத்த ஒப்புக்கொண்டார்கள். இன்று, ஆசியாவின் மிகப்பெரிய மையம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அனைத்தும் அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது என்பதைப் பொறுத்து அமையும் என குறிப்பிட்டுள்ளார்..

முதலீட்டாளர்களை மாநிலத்தின் பங்குதாரர்களாகப் பார்ப்பதாகவும், வெறும் முதலீட்டாளர்களாக அல்ல என்றும் அமைச்சர் கே. டி. ராமராவ் தெரிவித்தார். கிரிப்டோகரன்சி பிரச்சினையில், அவர்களின் உண்மையான அக்கறை என்ன என்பதைப் புரிந்துகொள்ள இந்திய அரசு எடுத்துத்துரைக்க விரும்புகிறேன். கிரிப்டோவை எவ்வாறு கையாள்வது என்பதில் அதிக தெளிவு இல்லை. கிரிப்டோ மீது வரி விதிக்கப்படுகிறது. இது ஒரு தெளிவற்ற நிலைப்பாடு . துபாய்க்கு குடிபெயர்ந்து வரும் கிரிப்டோ முதலீட்டாளர்களுடன் பேச விரும்புகிறேன். இவ்வாறு அமைச்சர் கே. டி. ராமராவ் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான, வாழ தகுதியான நகரங்களின் பட்டியலில், பெங்களூர் கடைசி இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+