ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அய்யோ பார்த்தாலே பதறுகிறது.. ஹைதராபாத்தில் வீடு சரிந்த போது நூலிழையில் தப்பிய பெண்.. வைரல் வீடியோ!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கனமழை பெய்ததால் இரண்டு அடுக்குகளை கொண்ட குடியிருப்பு இடிந்து விழுந்த போது அவ்வழியாக சென்ற ஒரு பெண் நூலிழையில் உயிர்தப்பினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் நீர் நிலைகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

13 பேர் பலி

ஹைதராபாத் மட்டுமல்லாமல் பண்ட்லகுண்டா, ரங்காரெட்டி, யதாத்ரி புவனகிரி உள்ளிட்ட மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மழையால் 13 -க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

அடுக்குமாடி குடியிருப்பு

அடுக்குமாடி குடியிருப்பு

ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தால் வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் ஹைதராபாத்தில் சாலையில் ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு அடுக்குமாடி கொண்ட வீடு ஒன்று முழுவதுமாக திடீரென சரிந்து விழுந்தது.

உயிர் தப்பிய பெண்

உயிர் தப்பிய பெண்

அப்போது அந்த பெண் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடு இடிந்து விழுந்ததும் அப்பகுதி முழுவதும் புழுதிக்காடாக காட்சி அளித்தது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியை சுத்தம் செய்தனர்.

பதறுகிறது நெஞ்சு

பதறுகிறது நெஞ்சு

பேகம்பெட் வானிலை மையத்தின் தகவலின்படி ஹைதராபாத்தில் 19.2 மி.மீ. மழை புதன்கிழமை பதிவானது. இந்த மழையால் மக்களும் வாகனங்களும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இந்த ஆழ்ந்த குறைந்த காற்றழுத்தம் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது.

English summary
Hyderabad woman's great escape while building collapses, CCTV shows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X