உங்க மகன் ஜெய்ஷா கிரிக்கெட் பிளேயரா? கோச்சா? எப்படி பிசிசிஐ தலைவரு? அமித்ஷாவுக்கு கேசிஆர் மகன் கேள்வி
ஹைதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகராவை வாரிசு அரசியலை முன்வைத்து விமர்சித்துள்ளதற்கு பிஆர்எஸ் கட்சி செயல் தலைவரும் அமைச்சருமான கேசிஆர் கே.டி ராமா ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தெலுங்கானாவில் ஒவ்வொரு கனமும் அரசியல் களம் மாறிக் கொண்டே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஆளும் பிஆர்எஸ் கட்சியே மீண்டும் வெல்லும்; பின்னர் பாஜக ஆட்சியை கைப்பற்றும்; தற்போது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மாறி மாறி கருத்து கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கானாவில் எப்படியும் பாஜக ஆட்சி அமையும் என்பது அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை. ஆனால் பெரும்பாலான கருத்து கணிப்புகளோ பாஜகவுக்கு சிங்கிள் டிஜிட் இடம்தான் உறுதியாக கிடைக்கும் என்கின்றன.
இத்தனைக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படுதீவிர பிரசாரம் செய்தும் வருகின்றனர். இந்த வரிசையில் மத்திய உள்துறை அமைச்சர் தெலுங்கானாவில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவின் ஒரே ஒரு கனவு மகன் கேடி ராமாராவை முதல்வராக்குவது என்பதுதான். தெலுங்கானவில் சந்திரசேகர ராவ் ஆட்சிதான் தொடர வேண்டுமா? அல்லது மத்தியில் மாநிலத்தில் ஒரே கட்சியின் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு அமைய வேண்டுமா? என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும். பழங்குடியினர் நலனுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்தவர் பிரதமர் மோடிதான் என்றார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கேடி ராமாராவ் அளித்த பதில்: வாரிசு அரசியல் பற்றி அமித்ஷா பேசுவதுதான் வேடிக்கையானது. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர். இந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் ஜெய்ஷா என்ன கிரிக்கெட் வீரரா? கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவரா? அல்லது கிரிக்கெட் வீரர்களுக்கு கோச்சிங் நடத்தியவரா? பிறகு எப்படி இந்த பதவிக்கு ஜெய்ஷாவால் வர முடிந்தது என்பதை அமித்ஷா விளக்குவாரா?
மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு முன்பாக, 10 ஆண்டுகளில் பாஜக தெலுங்கானா மக்களுக்கு செய்தது இவை என பட்டியல் போட்டு பிரசாரம் செய்ய முடியுமா? தேர்தல் காலங்களில் பாஜக தலைவர்கள் அள்ளிவிடுகிற வெற்று வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்து போய் சோர்வடைந்துவிட்டனர் மக்கள். மத்தியில் பாஜக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் தெலுங்கானா மாநில அரசை பார்த்து காப்பியடித்ததுதான். இவ்வாறு கேடி ராமாராவ் கூறினார்.
-
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்!












Click it and Unblock the Notifications