ஹைதராபாத் வருகிறது லைட் ரயில் சேவை.. ஐடி ஊழியர்கள் நிம்மதி.. எப்படி இயங்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மக்களுக்கான போக்குவரத்தை எளிமைப்படுத்த லைட் ரயில் போக்குவரத்தை செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக ஹைதராபாத்தின் குகட்பள்ளி முதல் நரசிங்கி மற்றும் கொக்கபேட் வரை இந்த லைட் ரயில் திட்டத்தை செயல்பட்ட அம்மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 24.40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்த உள்ள இந்த திட்டத்தில் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் மேம்பாலத்திலேயே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான திட்ட அறிக்கை

விரிவான திட்ட அறிக்கை

ஹைதராபாத் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையம், ஹைதராபாத் மெட்ரோ ரயில் லிமிடெட் ஆகியவவை இணைந்து எல்.ஆர்.டி.எஸ் குறித்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க உள்ளது.

பணிக்கு சீக்கிரம் செல்லலாம்

பணிக்கு சீக்கிரம் செல்லலாம்

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் தங்கள் பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவர். புயலே அடித்தாலும் பூகம் வந்தாலும் சரியான நேரத்திற்கு சென்றால்தான் சம்பளம் கிடைக்கும் என்பதால் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்களுக்கு இது வரப்பிரசாதம்

24 ரயில் நிலையங்கள்

24 ரயில் நிலையங்கள்

இந்த வழித்தடத்தில் 24 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் இந்த வழித்தடம் கேபிஎச்பி, ஹைடெக் சிட்டி, ரெய்துர்க், என நரசிங்கி நிலையங்களோடு ஒருங்கிணைப்படும் என அதிகாரப் பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் திட்டம்

அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் திட்டம்

தற்போது ரயில் தடம் அமையவுள்ள ஹைடெக் நகரம் மற்றும் ஹைதராபாத் பொருளாதாரம் சார்ந்த பகுதிகளில் ஏராளமான எம்.என்.சி. நிறுவனங்களும் குகட்பள்ளி போன்ற பகுதிகளில் நாட்டிலேயே அதிகம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகும். அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் ஹைதராபாத் பெருநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மெட்ரோ ரயிலைப் போலவே இந்த திட்டமும் லட்சக்கணக்கான மக்கள் சிரமம் இன்றி பயணிக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+