Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திராவின் தலைநகர் குறித்து நீண்ட காலமாகவே குழப்பம் இருந்து வந்தது. இதற்கிடையே அனைத்து குழப்பங்களையும் முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமராவதியை ஒரே தலைநகராக அங்கீகரிக்கும் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்டம் நடந்து வருகிறது. அதில் பல்வேறு முக்கியமான மசோதாக்கள் குறித்து விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கிடையே மக்களவையில் இப்போது ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்தச் சட்டம், 2026 நிறைவேறியுள்ளது..

Lok Sabha Passes Bill to Make Amaravati Andhra Pradesh Sole Capital Bill Why its important

அமராவதி

இதன் மூலம் அமராவதி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே மற்றும் நிரந்தரத் தலைநகராகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மாநிலத்தின் தலைநகர் குறித்த பல ஆண்டுக்கால நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா, மார்ச் 28ம் தேதி முதலில் ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இது நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014இன் பிரிவு 5ஐ திருத்தக் கோரி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது..

மறுசீரமைப்பு சட்டம்

2014 மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் 10 ஆண்டுகள் வரை ஹைதராபாத் பொதுவான தலைநகராகச் செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பிறகு எது தலைநகர் என்பது தெளிவாகக் கூறப்படாமல் இருந்தது. அதைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக ஹைதராபாத்திற்குப் பதிலாக அமராவதி செயல்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. 2024 ஜூன் 2ம் தேதி முதல் அமராவதி தலைநகராக இருக்கும் என்று முன் தேதியிட்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் இது உள்ளடக்கியது.

முடிவுக்கு வரும் குழப்பம்

இது குறித்துப் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லவு கிருஷ்ணா, "இந்த மசோதா அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே தலைநகராக அங்கீகரிக்கிறது. இது மக்களுக்குத் தேவையான தெளிவையும் வழங்கும். முந்தைய அரசின் (ஜெகன் மோகன் அரசு) மூன்று தலைநகர் திட்டத்தை அறிவித்தது. அது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த குழப்பத்தைச் சரி செய்து, அமராவதியை மீண்டும் ஒரே தலைநகராக மீட்டெடுத்துள்ளோம்" என்றார்.

அமராவதி என்பது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டம். அவர் முதல்வராக இருந்தபோது அமராவதியை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இருப்பினும், இடையில் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அமராவதி திட்டத்தை அவரால் முடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது அமராவதிக்கு அங்கீகாரம் தரும் வகையில் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.

பின்னணி

சந்திரபாபு நாயுடு 2015ல் முதன்முதலில் அமராவதியை மாநிலத் தலைநகராக அறிவித்து, அதன் மேம்பாட்டிற்காக அதிக முதலீடு செய்திருந்தார். இடையில் 2019ல் ஆட்சிக்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, மூன்று தலைநகர் திட்டத்தைச் செயல்படுத்த முயன்றது. ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த திட்டத்தின்படி விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராக இருக்கும்.. அமராவதியில் சட்டமன்றத் தலைநகராகவும், கர்நூலில் நீதித்துறைத் தலைநகராகவும் இருக்கும். இருப்பினும், ஜெகன் திட்டத்திற்கு அப்போதே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்தச் சூழலில் தான் 2024ல் ஆந்திராவில் மீண்டும் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு, அமராவதி மட்டுமே மீண்டும் ஒரே தலைநகராக இருக்கும் என அறிவித்தார்.. இதைத் தொடர்ந்து, மாநிலச் சட்டசபை மத்திய அரசிடம் சட்டப்பூர்வ தெளிவைக் கோரியது. இந்தத் திருத்தச் சட்டம், அமராவதி தான் தலைநகர் என்பதை உறுதி செய்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் எனத் தலைநகரை மாற்ற முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+