உல்லாசம்.. 8 பெண்களோடு திருமணம்.. சினிமா பட பாணியில் நகை, பணத்துடன் ‛எஸ்கேப்’ ஆன என்ஜினீயர்
ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானாவில் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்த சாப்ட்வேர் என்ஜினீயர் ‛நான் அவன் இல்லை' படபாணியில் நகை, பணத்துடன் ‛எஸ்கேப்' ஆகியுள்ளார்.
நடிகர் ஜீவன் நடிப்பில் தமிழில் வெளியான படம் நான் அவன் இல்லை. இந்த படத்தில் 5 கதாநாயகிகள். நடிகைகள் சினேகா, மாளவிகா, கீர்த்தி சாவ்லா, நமிதா, ஜோதிமயி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து இருப்பவர்.
நடிகர் ஜீவன் வெவ்வேறு பெயர்களில் நடிகைகளை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி செல்வார். இந்த படத்தின் பாணியில் சில மோசடி சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது.

8 பெண்களுடன் திருமணம்
இந்நிலையில் தான் சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் தான் 8 பெண்களையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

காதலித்து திருமணம்
இந்நிலையில் சிவசங்கர் பிரபு ஏமாற்றிய ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் திரண்டு வந்து ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவதாகவும் எங்களை மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் எங்களை தொடர்பு கொண்டு ஏமாற்றியுள்ளார். குறிப்பாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதியான பெண்களை குறிவைத்து அவர் காதல் வலை வீசியுள்ளார். இதில் சிக்கிய நாங்கள் அவர் கூறியதை உண்மை என நம்பி காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

நகைகளுடன் எஸ்கேப்
திருமணம் செய்த பிறகு சில மாதங்கள் வரை இல்லற வாழ்க்கை இனிமையாக சென்ற நிலையில் அதன்பிறகு அவர் பணம், நகைகளை எடுத்து கொண்டு தலைமறைவாகினார். பல பொய்களை சொல்லி எங்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக குகட்பல்லி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் போலீஸ் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்ய வலியுறுத்தல்
சிவசங்கர்பாபுவின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும் கூட அவரை இன்னும் கைது செய்யவில்லை. எங்களை போல் பிற பெண்கள் ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றால் போலீசார் அவரை கைது செய்ய வேண்டும்'' என்றனர். இந்நிலையில் சிவசங்கர் பாபு ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறப்படும் பெண்களில் சிலர் கர்ப்பிணிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications