பாலியல் குற்றவாளிக்கு ஆதரவு அளித்து மோடி பெண்களை ஏமாற்றிவிட்டார்.. ராகுல் காந்தி பரபர குற்றச்சாட்டு
ஹைதராபாத்: பில்கிஸ் பானு வழக்கில் முன்கூட்டியே பாலியல் குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்த நிலையில், செங்கோட்டையில் பெண்களை மதிக்க வேண்டும் என பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 59 பேர் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது.
இதையடுத்து, குஜராத்தில் திடீரென கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் ஏராளமான இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

5 மாத கர்ப்பிணி பெண்
ராந்திக்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த 12 பேர், அங்கிருந்தவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை அடுத்து இந்த வழக்கில் கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமை
நாட்டையே உலுக்கிய இந்த கொலை மற்றும் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேரை ( ஒருவர் இறந்துவிட்டார்) குஜராத் மாநில அரசு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை செய்தது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தை இந்த விவகாரம் எழுப்பியது. குற்றவாளிகளை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

முன்கூட்டியே விடுதலை செய்ய
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குஜராத் அரசு நீதிமன்றத்தில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில் நன்னடத்தை காரணமாக 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததாக கூறப்பட்டு இருந்தது. பாலியல் வழக்கு குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதி அளித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

குற்றவாளிகளுக்கு உறுதுணையாக
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- செங்கோட்டையில் பெண்களை மதிக்க வேண்டும் என பேசுகிறார்கள். உண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள். பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கும் நோக்கத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக தெரிகிறது. பிரதமர் மோடி பெண்களை ஏமாற்றியுள்ளார்'' என்று விமர்சித்துள்ளார்.
-
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் மாணிக்கம் தாகூர்? ராகுல் காந்தி கிரீன் சிக்னல்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications