கல்யாணமாகி 10 நாள்தான் ஆச்சு.. அதற்குள் தூக்கில் தொங்கிய பூர்ணிமா.. ஹைதராபாத்தில் இன்னொரு சோகம்!
திருமணம் ஆன 10 நாளில் புதுமண பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
ஹைதராபாத்: கல்யாணம் ஆன புதுப்பெண் பூர்ணிமா, திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இதனால் பூர்ணிமாவின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் கிளம்பி உள்ளது.
ஹைதராபாத்தில் ஒரு பிரபலமான சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வரும் பெண் பூர்ணிமா.. இவரது நண்பர் கார்த்திக்.. நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மலர்ந்தது.

இருவரும் சில மாதங்களாகவே உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டிலும் விஷயம் போனது.. பூர்ணிமாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்ப, கார்த்திக் வீட்டிலோ காதலுக்கு க்ரீன் சிக்னல் தந்தனர்.
பின்னர், பெற்றோரின் எதிர்ப்பை மீறி பூர்ணிமா கார்த்திகை 10 நாளைக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார்.. பூர்ணிமா தரப்பில் ஒருவர்கூட இந்த கல்யாணத்துக்கு வரவில்லை.. இதனால், பூர்ணிமாவுக்கு மனசுக்குள் வருத்தம் இருந்து கொண்டே இருந்தது.
இந்தநிலையில், திடீரென கார்த்திக்கின் வீட்டில் பூர்ணிமா தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. பூர்ணிமா இப்படி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோரிடமும் சொல்லப்பட்டது.
இதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், 10 நாளுக்கு முன்பு கல்யாணம் ஆன மகள் எப்படி இறக்க முடியும்? மகளின் தற்கொலைக்கு கார்த்திக்கும், அவரது பெற்றோரும்தான் காரணம் என்று போலீசில் பூர்ணிமாவின் பெற்றோர் புகார் தந்தனர். இதையடுத்து விசாரணை நடந்து வருகிறது.
உண்மையிலேயே பூர்ணிமா தற்கொலைதான் செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என்று விசாரித்து வருகிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்ட பெண் 10 நாளிலேயே இறந்துள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications