செகந்திராபாத் டூ விஜயவாடா ரயிலில் புதுமணத் தம்பதி விபரீத முடிவு! நடந்தது என்ன?வெளியான கடைசி வீடியோ
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஓடும் ரயிலில் விபரீத முடிவை எடுத்த புதுமண தம்பதி, ரயிலில் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பயணிகள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இவர்கள் நடந்து கொண்தற்கு நெட்டிசன்கள் முதலில் கண்டனம் தெரிவித்திருந்தும் தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள ராவு பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கொரடா சிங்காசலம் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் பவானி (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத் ஜக்காரெட்டி கூடத்தில் காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் செகந்திராபாத்திற்கு வந்த இவர்கள் அங்கிருந்து விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கடந்த 18ஆம் தேதி மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினர்.
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில், வங்கலப்பள்ளி ரயில் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது இருவரும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் ரயிலில் பயணித்த போது சண்டையிட்டுக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பதிவு செய்தது அந்த பெட்டியில் அவர்களது சீட்டுக்கு எதிரே இருந்தவர்கள்தான். அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
அந்த வீடியோவில் இவர்கள் சண்டையிட்டாலும் மனைவியை கணவர் சமாதானம் செய்வது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிலும் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் மனைவியை கணவர் கட்டிப்பிடிப்பது, அணைப்பது போன்ற செயல்கள் இருந்தன.
முதலில் இந்த தம்பதியின் வீடியோவை பார்த்து பலரும் கண்டபடி விமர்சித்திருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் ரயிலில் இருந்து குதித்து இறந்துவிட்டதை அறிந்ததும் பலரும் அவர்களது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக பதிவிட்டு வருகிறார்கள்.
ரயில் கதவுகளின் அருகேயும் இருவரும் சண்டையிட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது தவறி இருவரும் கீழே விழுந்தனரா, இல்லை ஒருவரை பிடிக்க போய் இருவரும் கீழே விழுந்து இறந்தார்களா? கோபத்தில் ஒருவர் குதிக்க இன்னொருவரும் குதித்துவிட்டாரா, இல்லை இருவரும் தற்கொலை செய்யும் முடிவுடன் குதித்துவிட்டனரா என தெரியவில்லை.

பேசினால் தீராத பிரச்சனை என்று ஒன்றும் இல்லை. நமக்கு வந்த பிரச்சனையை விட நிறைய பேர் நிறைய பிரச்சனைகளை எதிர்நீச்சல் போட்டு எதிர்த்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது கணவன்- மனைவி இடையே இது போன்ற பிரச்சனைகள் வரும் போது ஒருவர் அமைதியாகிவிட்டால் இன்னொருவரும் அமைதியாகிவிடுவார். இருவரும் பதிலுக்கு பதில் பேசிக் கொண்டே இருந்தால் வாக்குவாதம் முற்றி, கொலை, தற்கொலை நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.
எந்த ஒரு பிரச்சனைக்கு தற்கொலை எதற்கும் தீர்வல்ல. வாழ்ந்து காட்ட வேண்டும். யாருக்காவது தற்கொலை எண்ணம் வந்தால் உதவிக்கு மன நல ஆலோசனை எண் 104 அல்லது 14416 என்ற எண்ணை அழையுங்கள்.
-
ரயில்வே வரலாற்றில் ரூ.100 கோடி மெகா அசுர வருவாய்! வியக்க வைத்த கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications