10ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து.. அடுத்தாண்டு முதல் எக்ஸாம் டென்சன் இல்லை.. மாநில அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கல்வி அமைப்பை மேம்படுத்தவும் இடை நிற்றலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்தப்படாது என அம்மாநில அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். 10ம் வகுப்பில் நடத்தப்படும் பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்தே மாணவர்கள் எந்த க்ரூப் எடுக்கலாம் என்பதை முடிவு செய்வார்கள். இதனால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்கள் வாழ்க்கையில் முக்கியமானதாகவே கருதப்படும்.

Telangana 10th public exam

பொதுத் தேர்வு ரத்து

இதற்கிடையே 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்வதாகத் தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அடுத்த கல்வி ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்யத் தெலுங்கான அரசு முடிவெடுத்துள்ளது. இது கல்வி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது..

முடிவு

மாணவர்களின் கல்வி சுமையைக் குறைத்து, நிற்றலை மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இப்போது தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கல்வி முறைக்கு மாற்றாக, நர்சரி முதல் 12ஆம் வகுப்பு வரை மாநிலம் முழுக்க ஒருங்கிணைந்த கல்வி அமைப்பை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய கொள்கையின் கீழ் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்ற அழுத்தம் இருக்காது. மாறாக, தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும். இது மாணவர்களுக்கு ஏற்படும் கல்வி சுமையைக் குறைக்கும்!

இடைநிற்றல்

அங்குத் தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்புக்குப் பிறகு இடைநிற்றல் அதிகரிக்கிறது. பொதுத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தங்கள் கல்வியைப் பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். அதை மாற்றவும் தடையின்றி கல்வியைத் தொடரவும் இது உதவும் என அரசு நம்புகிறது. முழு கல்வி அமைப்பையும் ஒரே கட்டமைப்பில் சீரமைப்பதன் மூலம், சீரான தன்மை, மேம்பட்ட நிற்றலைத் தர முடியும் என அதிகாரிகள் நம்புகிறார்கள்..

தெலங்கானா கல்வித் துறையை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தவிரத் தெலுங்கானாவில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெலுங்கானா அரசு கூறியுள்ளது.

ஏன் முக்கியம்

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது கட்டாயமாக இருக்கும் சூழலில் தெலுங்கானா அரசு எடுத்துள்ள இந்த முடிவு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இது தெலுங்கானா கல்விக் கொள்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். நீண்டகால வளர்ச்சிக்கு உகந்த, மாணவர்களுக்கு ஏற்ற, முற்போக்கான கல்வி அமைப்பை நோக்கி கல்விச் சூழலை உருவாக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+