Miss World 2025: உலக அழகியாக தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா தேர்வு! பரிசுத்தொகை மட்டும் இத்தனை கோடியா?
ஹைதராபாத்: மிஸ் வேர்ல்ட் 2025 அழகி போட்டி நடப்பு ஆண்டில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா மிஸ் வேர்ல்ட் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெறுவது இது 3-வது முறையாகும்.
ஆண்டு தோறும் உலக அழகி போட்டி நடைபெறும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்பது வழக்கம். மிஸ் வேர்ல்ட் 2025 அழகி போட்டி இந்தாண்டு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் இன்று நடைபெற்றது. இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெறுவது இது 3-வது முறையாகும்.

இதற்கு முன்பு 1996 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற்று இருந்த்து.. இப்போது மூன்றாவது முறையாக உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இந்த உலக அழகி போட்டியில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழகிகள் கலந்து கொண்டனர். இதில், தாய்லாந்தை சேர்ந்த ஒபல் சுசதா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில், 'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். 40 பேர் காலிறுதிக்கு முன்னேறிய நிலையில். இதில் முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நந்தினி குப்தா தவறவிட்டார். இன்று இரவு நடைபெற்ற இறுதி சுற்றில் சுச்சாட்டா சுவாங் தேர்வு ஆகியுள்ளார்.
எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு இரண்டாவது இடத்தை பிடித்தார். அழகிகளுக்கு இடையே விளையாட்டு, தனித்திறமை, நடனப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு அதில் சிறப்பாக செயல்பட்டவர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
உலக அழகியாக தேர்வு செய்யப்படுவர்களுக்கு அணிவிக்கப்படும் கிரீடத்தின் மதிப்பு சுமார் 3 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வெற்றி பெறுபவருக்கு ரூ.1.15 கொடி ரொக்கமாகவும் கொடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications