Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த பதில் தான் முக்கியம்! தெலுங்கானாவில் சோனியா போட்டி? ரேவந்த் ரெட்டி சந்திப்பில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி தெலுங்கானாவில் இருந்து போட்டியிடுகிறாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியா காந்தியிடம் தெலுங்கானாவில் போட்டியிட வலியுறுத்திய நிலையில் அவர் கூறிய பதில் தான் இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணமாக உள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகளை வென்ற நிலையில் வரும் தேர்தலில் 3 இலக்கத்தில் தொகுதிகளை வெல்ல வேண்டும் என காங்கிரஸ் திட்டமிட்டு வியூகம் வகுத்து வருகிறது.

Parliament Election 2024: Sonia Gandhi will contest from Telangana after request from Revanth Reddy she says this

குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் 2014ல் உருவான பிறகு முதல் 2 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் இப்போது முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவை வீழ்த்தி முதல் முறையாக அரியணை ஏறி உள்ளது. அம்மாநில முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை மதல்வர் மல்லு பட்டி விக்ரமார்க்கா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாஸ் ரெட்டி உள்ளிட்டவர்கள் நேற்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் தெலுங்கானா சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணம் மற்றுமு் ரூ.10 லட்சம் சுகாதார திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்தனர். மேலும் சிலிண்டரை ரூ.500க்கு வழங்குவது மற்றும் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

இதுமட்டுமின்றி வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதாவது சோனியா காந்தி தெலுங்கானாவில் இருந்து போட்டியிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் மொத்தம் 17 நாடாளுமன்ற தொகுதி உள்ளதால் ஏதாவது ஒரு தொகுதியில் களமிறங்க வேண்டும். இதன்மூலம் காங்கிரஸ் தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு உருவாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை கேட்ட சோனியா காந்தி, ‛‛சரியான நேரத்தில் இதுபற்றி முடிவு எடுத்து சொல்கிறேன்'' என அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் சோனியா காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் போட்டியிட உள்ளாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. . சோனியா காந்தி இப்போது உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்பியாக இருக்கிறார். முன்னதாக சோனியா காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவருக்கு உடல்நல பிரச்சனை உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா மூலம் எம்பியாகலாம் என்ற தகவல் வெளியானது.

இருப்பினும் சோனியா காந்தியை போட்டியிட வைக்கும் முனைப்பில் காங்கிரஸ் தலைவர்கள் அவரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானது. இதனால் நீங்கள் நிச்சயம் போட்டியிட வேண்டும். நீங்கள் போட்டியிடாவிட்டால் அதனையே பாஜக பெரிய பிரசாரமாக முன்னெடுக்கும் எனக்கூறி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தெலுங்கானாவில் இருந்து போட்டியிட வேண்டும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியா காந்தியிடம் வலியுறுத்தி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+