அண்ணி பரிசளித்த பேனா; ஆடிப் போன பவன் கல்யாண்! விலை எவ்வளவு தெரியுமா? இத்தனை லட்சமா?
ஆந்திரா: தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள பவன் கல்யாணுக்கு அவரது அண்ணி பரிசாகக் கொடுத்த பேனாவைப் பற்றிய தகவல்களை நெட்டிசன்கள் தேடி எடுத்து சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள பவன் கல்யாணின் உன்மையான பெயர் கொனிடேலா கல்யாண் பாபு. இவர் 1996 ஆம் ஆண்டு தனது முதல் படமான அக்கடா அப்பா இக்கடா அம்மை படத்தில் நடித்தபோது தனது பெயரைப் பவன் கல்யாண் என மாற்றிக் கொண்டார்.

அப்படியே அவரும் அழைக்கப்பட்டார். இவரைப் பற்றி பலரும் அறியாத விசயம் ஒன்று உண்டு. இவர் சிறந்த டான்ஸ் மாஸ்டர். ஆந்திர மாநிலத்திலிருந்த சிராலா தான் இவர் பிறந்த ஊர். அப்பா ஸ்ரீ வெங்கட ராவ். அம்மா ஸ்ரீமதி அஞ்சனா தேவி. இவரது அண்ணன் தான் நடிகர் சிரஞ்சீவி என்பது உலகம் அறிந்த செய்தி.
பவன் கல்யாணுக்கு மொத்தம் மூன்று மனைவிகள். இப்போது அவர் முன்னாள் ரஷ்ய மாடலான அன்னா லெஷ்னேவாவுடன் வாழ்ந்து வருகிறார். இவரது முதல் மனைவி ரேணு தேசாய். இந்த ஜோடிக்கு 2 வாரிசுகள் உள்ளனர்.
அடுத்து அகிரா நந்தன் 2004இல் பிறந்தார். அடுத்து ஆத்யா என்ற மகள் 2010 இல் பிறந்தார். சினிமா வாழ்க்கையில் போதே சமூக நலக் காரியங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்டார் பவன். கூடவே அரசியல் நிகழ்வுகள் பற்றியும் பேசி வந்தார்.
இறுதியாக ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா மட்டுமே தனது வாழ்க்கை இல்லை என்ற முடிவைத் தீவிரமாக எடுத்தார். அதன்படி 2014 ஆம் ஆண்டு ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். ஜன சேனா என்றால் தெலுங்கு மொழியில் மக்கள் ராணுவம் என்று அர்த்தம். அல்லது மக்கள் படை என்றும் சொல்லலாம்.
தனது கட்சியின் பெயரை 2014 மார்ச் மாதம் 10 தேதி முறைப்படி பதிவு செய்தார். மார்ச் 14 அன்று மாதப்பூரில் உள்ள ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் கட்சியை முறைப்படி அறிவித்தார். அவரது கட்சிக்குத் தேர்தல் ஆணையம் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மாபெரும் யாத்திரையை ஆந்திரா முழுவதும் நடத்தினார் பவன். அந்தப் பேரணி ஆளும் கட்சி உட்படப் பல கட்சிகளின் மனதை உறுத்தியது. அந்தளவுக்கு மாநிலமே ஸ்தம்பித்தது.
எப்படியும் ஜனசேனா ஆட்சியைப் பிடித்துவிடும் என்று எண்ணம் பலரது மனதில், அது விதைத்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத அளவு படுதோல்வியைச் சந்தித்தது கட்சி. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பவன் கட்சி வெற்றி பெற்றது.

இனிமேல் அவர் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்த நேரத்தில் மறுபடியும் மீண்டு எழுந்துள்ளது ஜனசேனா. இந்தத் தேர்தலில் அவரது கட்சி 21 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இவரை விடப் பெரிய ஸ்டார் இவரது அண்ணன் சிரஞ்சீவி. அவர் கடந்த 2008இல் பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கினார். அப்படி என்றால் மக்களாட்சி என்று அர்த்தம். அவரது கட்சிக்கு ரயில் சின்னம் கூட ஒதுக்கப்பட்டது.
தெலங்கானா தனிமாநிலமாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பு 2009இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இந்தக் கட்சி மொத்தம் 294 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பிறகு எவ்வளவோ முயற்சிகளைச் செய்து, அரசியல் வாழ்க்கையில் சிரஞ்சீவியால் வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் கட்சியை 2011இல் காங்கிரசுடன் இணைத்தார் இவர்.
அப்போது அவருக்குத் தெரிந்திருக்காது, நமது வீட்டிலிருந்தே ஒருவர் ஆந்திராவின் துணை முதல்வராகப் பதவியேற்பார் என்று. அதைச் செய்து காட்டியுள்ளார் அவரது தம்பி பவன்.
இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அண்ணனிடம் போய் ஆசீர்வாதம் வாங்கப் பவன் வீட்டுக்குச் சென்றார். அப்போது கட்டியணைத்து வரவேற்ற சிரஞ்சீவி காலில் விழுந்து வணங்கினார் பவன். அந்த வீடியோ வைரலானது.
அண்ணனால் முடியாததைத் தம்பி செய்து காட்டியுள்ளதால் சிரஞ்சீவி மனைவி சுரேகா பவன் கல்யாணுக்கு துணை முதல்வராகப் பதவியேற்கும் போது கையெழுத்துப் போடுவதற்காக ஒரு அற்புதமான பேனாவைப் பரிசளித்தார்.
அது மிகவும் விலையுயர்ந்த மோன்ட் பிளாங்க் வால்ட் டிஸ்னி பேனா. உடனே அது தொடர்பான வீடியோவை சிரஞ்சீவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.
அந்த வீடியோவில் அண்ணியின் கைகளால் பேனாவைக் கொடுத்த போது பவன் அதைக் கொண்டாடினார். ஆனால், தன்னிடம் ஏற்கனவே பேனா இருப்பதாகச் சொல்ல நினைத்தார். விடாமல் இதையும் வைத்துக்கொள் என்று பவன் பாக்கெட்டில் பேனாவை வைத்திருந்தார் சுரேகா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நெட்டிசன்கள் அந்தப் பேனாவைப் பற்றிய விவரங்களைத் தேடத் தொடங்கினர். அதன் விலை என்ன என்று அறியக் கூகுளில் தேட ஆரம்பித்தனர்.
இந்த Montblanc Walt Disney பேனாக்களின் விலை மிகமிக அதிகம். சுரேகா பவனுக்குப் பரிசாக வழங்கிய மோன்ட் பிளாங்க் டிஸ்னி எடிஷன் பேனாக்களின் விலை சுமார் ரூ.90 ஆயிரம் தொடங்கி ரூ.2.60 லட்சம் வரை உள்ளன.
இதில், பால் பாயின்ட் பேனா என்றால் ஒரு விலை. ஃபவுண்டன் பேனா என்றால் அதற்குத் தனி விலை. பால் பாயின்ட் பேனாக்களின் விலை 90 ஆயிரம் வரை இருக்கிறது என்றால்.. ஃபவுண்டன் பேனாக்களின் விலை ரூ. 2.60 லட்சம் மேல் உள்ளது. Mont Blanc நிறுவனம் ஆடம்பர பேனாக்கள், பைகள், கைக்கடிகாரங்கள், தோல் பொருட்கள்,சென்ட் போன்ற விலையுயர்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்தத் தகவல்களை எல்லாம் இணையத்தில் தேடிப்படித்த பவன் ரசிகர்கள் விலையைக் கேட்டதும் வாயடைத்துப் போய் உள்ளனர். இன்னொரு புறம் முதன்முதலாக ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவியேற்ற பவன் இந்த காஸ்ட்லியான பேனாவைப் பயன்படுத்திதான் கோப்புகளில் தனது முதல் கையெழுத்தைப் போட்டுள்ளார். அது மரியாதையான செயல்தான் என்றும் பலர் கருத்திட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications