அதென்ன "குறியீடு".. புறா காலில் கட்டப்பட்ட சீனாவின் 'Tag'.. ஒரே இடத்தில் பறந்து.. அலறி ஓடிய மக்கள்

ரகசிய குறியீடுடன் சுற்றி சுற்றி வந்த புறாவால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: புறா ஒன்று சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது.. அதன் காலில், சீன நாட்டின் ரகசிய குறியீடு இருந்தது.. சீன டேக் போன்று அதை காலில் கட்டி இருந்ததாலும், சுற்றி சுற்றி வந்ததாலும், தெலுங்கானா மக்கள் பயந்துபோய்விட்டனர்..!

பண்டைய காலங்களில் ராஜாக்கள் புறாக்களை தூதுவர்களாக பயன்படுத்தி வந்தனர்.. புறாக்களின் கால்களில் ரகசிய தகவல்கள் அடங்கிய சீட்டை கட்டி, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள்..

அதன்மூலம்தான் அன்றைய தகவல்கள் பரிமாற்றங்கள் நடந்தன.. இந்த புறாக்களை நேரடியாக தாங்கள் பழக்கத்தில் வைத்து கொள்ளாமல், இதற்காகவே ஒற்றர்களை நியமித்து, அவர்கள் மூலம் புறாக்களை உபயோகித்து வந்தனர்..

 தெலுங்கானா

தெலுங்கானா

ராஜ்ஜிய விஷயங்களை சுமந்து சென்ற புறாக்கள், அடுத்தக்கட்டமான காதலுக்கும் தூது போனது.. காதல் கடிதங்களை புறாக்கள் சுமந்து கொண்டு சென்றன.. ஆனால், இதையெல்லாம் நினைவுபடுத்தும்படியான ஒரு சம்பவம்தான் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.. நேற்றைய தினம், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே சீமகுர்த்தி என்ற ஊர் உள்ளது.. இங்குள்ள அபார்ட்மென்ட்டில் ஒரு புறா சுற்றி சுற்றி வருவதை சிலர் பார்த்துள்ளனர்..

 வனத்துறை அதிகாரிகள்

வனத்துறை அதிகாரிகள்

அதன்காலில் காலில் சீன நாட்டின் ரகசிய குறியீடு இருப்பதையும் கண்டு பயந்துபோய் அதை பாய்ந்து பிடித்துள்ளனர்.. பிறகு போலீஸாருக்கும் தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து, அந்த புறாவை பார்வையிட்டனர்.. பிறகு, அதன் காலில் இருந்த ரகசிய குறியீடையும் பறிமுதல் செய்தனர்... அதில் Air-2022 என்ற குறியீடு காணப்பட்டது... அத்துடன் சில சீன எழுத்துக்களும் இருந்தன.. இந்த புறா 2 மாதங்களாகவே இப்படித்தான் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறதாம்..

 விசாரணை

விசாரணை

அப்பகுதி மக்கள் புறாவை கவனித்தாலும், அதன் குறியீட்டை சமீபத்தில்தான் பார்த்துள்ளனர்.. இப்போது இது தொடர்பாக விசாரணையும் நடந்துவருகிறது. அதேபோல, ஒடிஷா மாநிலம், காம்ஸ்பஹால் கிராமத்திலும் இதுபோலவே சம்பவம் நடந்துள்ளது.. புறா ஒன்று அடிபட்டு ரோட்டில் விழுந்து கிடந்துள்ளது.. அந்த வழியாக சர்பேஷ்வர் சவுத்ராய் என்பவர் சென்றுள்ளார்.. அந்த புறாவின் கால்களிலும் சீன எழுத்துக்கள் கொண்ட ஒரு ரகசிய குறியீடு இருந்துள்ளது... எனவே, அவரும் போலீஸாருக்கு தகவல் தந்துள்ளார்.. போலீசாரும் விரைந்து வந்து இது தொடர்பான விசாரணை நடத்தி வருகிறார்கள்..

 எங்கிருந்து வந்தன?

எங்கிருந்து வந்தன?

இந்த புறாக்கள் எங்கிருந்து வந்தன? ஒருவேளை சீனாவின் உளவு புறாவாக இருக்குமோ? என்றெல்லாம் பீதி கிளம்பிவிட்டது.. ஆனால், சீனாவில் இருந்து ஒரு புறா இவ்வளவு தூரம் பறந்து வர வாய்ப்பு இல்லை என்று வனத்துறையினர் சொல்கிறார்கள்.. இருந்தாலும், சந்தேக புறா குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த புறா ரேஸ் விடும் மையம் ஒன்றை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.. மற்றொரு புறா பற்றி இன்னும் விவரம் தெரியவில்லை.. விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+