ப்ளான் பண்ணி தான் பண்ணோம்! போலீஸை அதிர வைத்த ‘வாரிசுகள்’! கதறித் துடித்த பள்ளி மாணவி! என்ன திமிர்?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் சொகுசு காருக்குள் வைத்து பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சிறுமி தங்களுடன் நட்புடன் பழகியதை பயன்படுத்தி அவரை திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த மே 28 அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமி அங்குள்ள பப்பிற்கு 5 சிறுவர்களுடன் வந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

நிகழ்ச்சி முடிந்து சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாக கூறி கூட வந்த 5 சிறுவர்கள் சிகப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றியுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அந்த சிறுமியை காருக்குள்ளேயே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் தெலுங்கனாவில் ஆளும் முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பிரமுகர்களின் வாரிசுகள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை தப்பிக்க வைக்க காவல்துறையினர் முயல்வதாக பகீர் புகார் கிளம்பியது.

வாரிசுகள் கைது

வாரிசுகள் கைது

விவகாரம் பெரிதான நிலையில் ஓவைசி கட்சியின் எம்எல்ஏவின் மகனும் சிறுமியை பலாத்காரம் செய்த காரில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவரது குற்றத்தை போலீசார் மூடிமறைக்கும் பணியில் ஈடுபட்டதாக பாஜகவினர் புகார் கூறி இருந்தனர். ஆரம்பத்தில், சட்டமன்ற உறுப்பினரின் மகன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடவில்லை என்று போலீசார் கூறினர். அதன் பிறகு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.

அதிர்ச்சி வாக்குமூலம்

அதிர்ச்சி வாக்குமூலம்

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலானோர் இனிதான் 18 வயதை பூர்த்தி செய்ய இருக்கின்றனர். மேலும் அனைவருமே அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் என்று தெரியவந்துள்ள நிலையில் இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் சிறுமி தங்களுடன் நட்புடன் பழகிய நிலையில் அவர் மீது ஆசை கொண்டு திட்டமிட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர்.

இளைஞரின் திட்டம்

இளைஞரின் திட்டம்

சம்பவம் நடந்த அன்று ஓட்டலில் இருந்து வரும்போதே சிறுமியை பென்ஸ் காரில் அழைத்துச் செல்ல திட்டமிட்டதாகவும் ஆனால் எம்எல்ஏவின் மகன் அந்த பெண்ணை தனது காரில் ஏற்றிக் கொண்டு மற்றவர்களை இன்னோவா காரில் வரச் சொல்லி விட்டுச் சென்றதாகவும், பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். சிறுமி தன்னை விட்டுவிடும்படி எவ்வளவு கெஞ்சியும் அது தங்கள் காதுகளில் விழவில்லை என்று 18 வயதான இளைஞர் ஒருவர் தான் இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திட்டம் வகுத்து கொடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+