உச்சகட்ட பதற்றத்தில் ஹைதராபாத்.. தெலங்கானா காவல் துறைக்கு வந்த ரகசிய தகவல்.. 144 உத்தரவு அமல்
தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், நாடே திருவிழா கோலம் பூண்டுள்ளது. அனைத்து பகுதிகளும் மக்கள் கூட்டத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. ஆனால், ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி. ஆனந்த் வெளியிட்டுள்ள உத்தரவின்படி அக்டோபர் 27, அதாவது நேற்று முதல் அங்கு 144 தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவது, பேரணி, ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்துவது, சின்னம் அல்லது கொடி காண்பிப்பது, பொது இடங்களில் அறிவிப்பது, உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலங்கானா காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தர்ணா மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு ஹைதராபாத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாக நம்பகத்தன்மையான ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மக்களின் அமைதிக்காக இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அமைதியான தர்ணா மற்றும் போராட்டங்களை இந்திரா பூங்காவில் மட்டும் நடத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற எந்த இடங்களிலும் தர்ணா, போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக தலைமை செயலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு செலுத்தப்படுகிறது. எனவே காவல்துறையின் உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து, நவம்பர் 28 ஆம் தேதி மாலை 6 மணி வரை பொருந்தும் என்று காவல்துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அங்கு ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பாரதிய நகரிக் சுரகஷா சன்ஹிதா 2023 சட்டப்படி, இது பிரிவு 163 என்றழைக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஹைதராபாத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. காவல்துறை, ராணுவம், பறக்கும் படை உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தின் அமைதிக்காக மக்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications