தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு வந்த மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி அதிகாரியாக உள்ள மகள், தனது அலுவலகத்திற்கு வந்த போது சல்யூட் அடித்து தந்தை வரவேற்பு கொடுத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நம்மால் எட்ட முடியாத உயரங்களை நம் பிள்ளைகள் எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற கனவு இல்லாத பெற்றோரே இருக்க முடியாது. சிறுவயதில் தான் ஆசைப்பட்டு பெற முடியாமல் ஏமாந்தது போல நம் பிள்ளைகளுக்கும் நடந்து விடக்கூடாது என பார்த்து பார்த்து தன் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்வார்கள்.

இது நல்ல உடை உடுத்துவதில் தொடங்கி நல்ல கல்வியை பிள்ளைகளுக்கு கொடுப்பது வரை தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு கால கட்டத்திலும் இருக்கும். தனக்கு நல்லதாக உடுத்த ஒரு துணி இல்லாவிட்டாலும் கூட பிள்ளைகளை ராணி, ராஜா போல துணி எடுத்து கொடுத்து மகிழ்வார்கள்.
நமக்கு கிடைக்காத கல்வி தன் பிள்ளைகளுக்கும் கிடக்காமல் போய்விடக்கூடாது என இரவு பகலாக உழைத்தாவது லட்சியத்தை எட்ட வைக்க பெற்றோர்கள் படும் பாட்டை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில், தங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாகி, நினைத்ததை விட பெரிய இடத்திற்கு வந்துவிட்டால் பெற்றோர்கள் எல்லையில்லா மகிழ்ச்சிக்கே சென்று விடுவார்கள்.
தெலுங்கானாவில் இதுபோன்ற ஒரு நிகழ்வுதான் நடைபெற்றுள்ளது. காவல்துறையில் எஸ்.பியாக பணியாற்றி வருபர், ஐஏஎஸ் பணியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் தனது மகள், தன்னுடைய அலுவலகத்திற்கு வந்ததும் சல்யூட் செய்து வரவேற்ற காட்சி இணையத்தில் வைரல் ஹிட் ஆகிக் கொண்டு இருக்கிறது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்..
தெலுங்கானாவில் காவல் கண்காணிப்பாளாராக (SP) பொறுப்பில் இருக்கும் அதிகாரி என். வெங்கடேஸ்வரலு. தெலுங்கானா போலீஸ் அகடமியின் துணை இயக்குனராகவும் இருக்கும் இவரது அலுவலகத்திற்கு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் வருகை தந்து இருந்தனர். செமினார் ஒன்றிற்காக வந்து இருந்த பயிற்சி ஐஏஎஸ்களில் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்தியும் ஒருவர் ஆவர்.
அகடமியில் தனது மகளை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த வெங்கடேஸ்வரலு ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரி என்பதால் சல்யூட் அடித்தார். உமா ஹார்தியும் சிரித்தபடியே காவல்துறை அதிகாரியின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். தந்தை மகளாக இருந்தாலும் பணியிடத்திற்கு வந்ததும் உயரதிகாரி என்ற ரீதியில் வெங்கடேஸ்வரலு சல்யூட் செய்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவுகின்றன.
தனது கனவை நிறைவேற்றிய மகளை நினைத்து பெருமைப்பட்டவாறே சல்யூட் செய்கிறார் என நெட்டிசன்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். உமா பாரதி கடந்த 2022 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். உமாபாராதி தற்போது விகராபாத்தில் அதிகாரியாக உள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications