ராகுல் காந்தி ரெடியாகிட்டாரு.. கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி டீமுடன் மோதும் தெலுங்கானா முதல்வரின் அணி!
ஹைதராபாத்: அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் தான் இன்று இரவு ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அணிக்கும், மெஸ்ஸியின் அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது. இதற்காக ராகுல் காந்தி ஹைதராபாத் செல்ல உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
கால்பந்து ஜாம்பவனாக இருக்கிறார் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளன. கடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அணி தான் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது.

அடுத்த ஆண்டு ஜூன் 11ல் மீண்டும் உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் 3 நாள் சுற்றுப்பயணமாக லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு நள்ளிரவில் வந்திறங்கினார். கொல்கத்தாவில் இன்று நடக்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். அதன்பிறகு இன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்கிறார்.
மாலை 4 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்துக்கு அவர் செல்கிறார். அங்கு மெஸ்ஸிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகு அங்குள்ள ராஜிவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நட்பு ரீதியலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அணியும், மெஸ்ஸி அணியும் பங்கேற்க உள்ளது. ரேவந்த் ரெட்டியின் அணிக்கு ரேவந்த் ரெட்டியின் பெயரில் உள்ள முதல் 2 ஆங்கில எழுத்தான ஆர்ஆர் என்பதை சேர்த்து ‛ஆர்ஆர்9' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது மெஸ்ஸி அணிக்கு ‛மெஸ்ஸி 10' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்காக ரேவந்த் ரெட்டி கடந்த சில நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். இந்த போட்டியையொட்டி ராகுல் காந்தி, அவரது தங்கை பிரியங்கா காந்தி ஹைதராபாத்துக்கு செல்கின்றனர். ராகுல் காந்தி கால்பந்து பிரியர். ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தின்போது சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி இருக்கிறார். இந்நிலையில் தான் ராகுல் காந்தி பார்வையாளராக தனது தந்தை பிரியங்கா காந்தியுடன் ஹைதராபாத் செல்ல உள்ளார்.
இந்த போட்டியை காண மொத்தம் 39 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சுற்றி 2,500 போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications