நடிகையை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. காதலித்து ஏமாற்றிய பிரபல யூடியூபர் மீது பலாத்கார வழக்கு
ஹைதராபாத்: ஏழை மக்களுக்கு பணம், பொருள் கொடுத்து உதவி செய்யும் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து ஆபாசமாக வீடியோ, போட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக 25 வயது நடிகை கொடுத்த புகாரில் போலீசார் ஹர்ஷா சாய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யூடியூப்பில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் ஹர்ஷா சாய். இவர் ஏழை மக்களுக்கு பணம், பொருட்கள் உதவி செய்வதை வீடியோவாக எடுத்து யூடியூப் மற்றும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஹர்ஷா சாயை அவரது ரசிகர்கள் 'Mr Beast of India' என்று அழைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது ஹர்ஷா ராய், 25 வயது நிரம்பிய நடிகையை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக பரபரப்பான புகார் கிளம்பி உள்ளது.
இந்த புகாரை கொடுத்து இருப்பவர் 25 வயது நடிகை. இவர் டெலிவிஷன் தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கானா மாநிலம் நார்சிங்கி போலீசில் அளித்த புகாரில், ‛‛ஹர்ஷா சாயும், நானும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது அவர் எனது ஆபாச போட்டோ, வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் கேட்கிறார்’’ என கூறியுள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி மீது புதிய வழக்கு.. ஜாமீனில் வந்தாலும் விடாத பழனி போலீசார்.. பிரிவுகள் இதுதான்
இந்த புகாரை தொடர்ந்து நார்சிங்கி போலீசார் யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி நார்சிங்கி போலீசார் தரப்பில், ‛‛ஹர்ஷா சாய் இன்னும் கைது செய்யப்படவில்லை. புகார் அளித்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட நடிகை மற்றும் ஹர்ஷா சாய் ஆகியோர் நண்பர்கள் மூலம் பார்ட்டி ஒன்றில் முதல் முதலாக சந்தித்தனர். அதன்பிறகு இருவரும் நண்பர்களாகி பழகினர். அதன்பிறகு காதலித்ததாகவும், ஹர்ஷா சாய் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். தற்போது நடிகை பலாத்கார புகார் அளித்துள்ளார்.
மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி! திருப்பதி லட்டு சர்ச்சையில் பவன்கல்யாணிடம் வருத்தம்
மேலும் ஹர்ஷா சாய் அவரை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்து வைத்து அதனை வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் கேட்பதாக புகார் தந்துள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’’ என கூறியுள்ளனர். ஹர்ஷா சாய் ஏராளமான உதவிகளை செய்து வரும் நபர் என்ற நிலையில் தற்போது அவர் மீதான இந்த பாலியல் வழக்கு ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications